சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தேமுதிக சுதீஷ் முன்பாக நிர்வாகி தீக்குளிக்க முயற்சி

Added : ஜன 03, 2021
Share
Advertisement
திருநெல்வேலி:தேமுதிக தலைவர் சுதீஷ் முன்னிலையில் கட்சி நிர்வாகி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.தே.மு.தி.க.,கட்சியின் இளைஞரணித்தலைவர எல்.கே.சுதீஷ் நேற்று துாத்துக்குடி மாவட்டம் கயத்தாறு வந்தார். சுதந்திர போராட்டவீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 262வது பிறந்த தினத்தையொட்டி, கயத்தாறு நினைவு மண்டபத்தில் உள்ள சிலைக்கு மாலையணிவித்தார். பின்னர் அங்கு
 தேமுதிக சுதீஷ் முன்பாக நிர்வாகி தீக்குளிக்க முயற்சி

திருநெல்வேலி:தேமுதிக தலைவர் சுதீஷ் முன்னிலையில் கட்சி நிர்வாகி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தே.மு.தி.க.,கட்சியின் இளைஞரணித்தலைவர எல்.கே.சுதீஷ் நேற்று துாத்துக்குடி மாவட்டம் கயத்தாறு வந்தார். சுதந்திர போராட்டவீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 262வது பிறந்த தினத்தையொட்டி, கயத்தாறு நினைவு மண்டபத்தில் உள்ள சிலைக்கு மாலையணிவித்தார். பின்னர் அங்கு திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்ட தொகுதி பொறுப்பாளர்களை சந்தித்தார்.அப்போது திருநெல்வேலியை சேர்ந்த குட்டி 45 என்பவர் கையோடு கொண்டு வந்திருந்த பாட்டில் மண்ணெண்ணெய் தலையில் ஊற்றிக்கொண்டார்.

சுதீஷ் முன்னிலையில் நடந்த இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. அவர் தீக்குளிக்கும் முன்பாக தொண்டர்கள் தடுத்து நிறுத்தி மண்டப அறைக்குள் அவரை கொண்டுசென்று தண்ணீர் ஊற்றினர். திருநெல்வேலி மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள மீனாட்சிசுந்தரத்தை மாற்றக்கோரியும் புதிய மாவட்ட செயலாளரை நியமிக்க வலியுறுத்தியும் தீக்குளிக்க முயற்சித்துள்ளார். பிறகு அவரை அழைத்து சால்வையணிவித்த சுதீஷ், இத்தகைய செயல்களில் கட்சியினர் யாரும் ஈடுபடக்கூடாது என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X