ஸ்ரீபெரும்புதுார் : காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், வல்லக்கோட்டை முருகன் கோவில் குளக்கரையோரம், அண்ணா மறுமலர்ச்சி திட்ட நுாலகம் இயங்குகிறது.
வார நாட்கள் முழுதும் இயங்கும் இந்நுாலகத்தில், 800க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர்.ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை தினங்களை தவிர்த்து, மற்ற அனைத்து நாட்களிலும், காலை, 10:00 - 1:00 மணி வரை, பிற்பகல், 2:00 - -4:00 மணி வரை இயங்குகிறது. வல்லக்கோட்டை கிராம இளைஞர்கள், பள்ளி மாணவர்கள், கோவிலுக்கு வரும் பக்தர்கள் இந்த நுாலகத்திற்கு சென்று, 'தினமலர்' உள்ளிட்ட தினசரி நாளிதழ்கள், கதை புத்தகங்களை படித்து பயனடைகின்றனர்.வாசிப்பிற்கு இடையே கோவில் கோபுரத்தையும், ரம்மியமான குளத்தையும் கண்டு ரசிக்கலாம்.
இதனால், வல்லக்கோட்டை நுாலகம், வாசகர்களை கவர்ந்துள்ளது.இது குறித்து, வாசகர் தே.சரவணன் கூறியதாவதுகோவிலுக்கு வரும் பக்தர்கள், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள், இந்த நுாலகத்திற்கு சென்று படிக்கின்றனர். கிராம நுாலகமாக இருப்பதால், குறைவான புத்தகங்களே இருக்கின்றன.இந்த நுாலகத்தை, நுாலக துறையுடன் இணைத்து, கிளை நுாலகமாக தரம் உயர்த்த வேண்டும். ஆன்மிக புத்தகங்கள், வரலாற்று தகவல்கள், இளைஞர்கள், சிவில் சர்வீஸ் தேர்வுகள் எழுத, தேவையான புத்தகங்களை இந்த நுாலகத்தில் வைத்தால், மேலும் பயனுள்ளதாக இருக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE