* போலீஸ் டைரி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

* போலீஸ் டைரி

Added : ஜன 03, 2021
Share
கும்மிடிப்பூண்டி : கும்மிடிப்பூண்டி அருகே, மங்காவரம் கிராமத்தில், பொன்னியம்மன் கோவில், பட்டுபுள்ளி கிராமத்தில் ஆச்சியம்மன் கோவில் உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, இரு கோவில்களின் பூட்டை உடைத்து, இரு அம்மன் சிலைகளில் அணிவித்திருந்த 16 கிராம் தங்க தாலி, பொட்டை மர்ம நபர்கள் திருடி சென்றனர். கும்மிடிப்பூண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.l இதே போன்று, அன்று இரவே,

கும்மிடிப்பூண்டி : கும்மிடிப்பூண்டி அருகே, மங்காவரம் கிராமத்தில், பொன்னியம்மன் கோவில், பட்டுபுள்ளி கிராமத்தில் ஆச்சியம்மன் கோவில் உள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, இரு கோவில்களின் பூட்டை உடைத்து, இரு அம்மன் சிலைகளில் அணிவித்திருந்த 16 கிராம் தங்க தாலி, பொட்டை மர்ம நபர்கள் திருடி சென்றனர். கும்மிடிப்பூண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.l இதே போன்று, அன்று இரவே, ஆரம்பாக்கம், பஜார் பகுதியில் உள்ள லட்சுமியம்மன் கோவில், பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள், பீரோவில் வைத்திருந்த, 15 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடி சென்றனர். இது குறித்து, ஆரம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.

கும்மிடிப்பூண்டி அடுத்த, எளாவூர், ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியில், போலீசார் நேற்று வாகன தணிக்கை செய்தனர்.அப்போது, ஆந்திர மாநிலம், நெல்லுாரில் இருந்து, சென்னை நோக்கி வந்த ஆந்திர மாநில அரசு பஸ்சை நிறுத்தி சோதனையிட்டனர்.அதில், இரு பைகளில் இருந்த 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வழக்கு பதிந்த ஆரம்பாக்கம் போலீசார், பஸ்சில் பயணித்த இருவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.8 கிலோ கஞ்சா பறிமுதல்மூன்று கோவில்களில் திருட்டு

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X