சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விபத்துக்குள்ளான மின் கம்பம் இடையூறாக நிறுத்தம்

Added : ஜன 03, 2021
Share
Advertisement
காஞ்சிபுரம் : புதிய ரயில் நிலையம் சாலையில், விபத்துக்குள்ளான இடையூறு மின் கம்பத்தை அகற்றி, அதே இடத்தில் புதிய கம்பத்தை நட்டுள்ளதால், பொதுமக்கள் விபத்தில் சிக்கும் அவலம் தொடரும் நிலை உள்ளது. காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம் அருகில், மேம்பால பணிக்காக, ஓராண்டுக்கு முன், சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது.அப்போது, சாலை நடுவே இருந்த மின் கம்பத்தை அகற்றாததால்,

காஞ்சிபுரம் : புதிய ரயில் நிலையம் சாலையில், விபத்துக்குள்ளான இடையூறு மின் கம்பத்தை அகற்றி, அதே இடத்தில் புதிய கம்பத்தை நட்டுள்ளதால், பொதுமக்கள் விபத்தில் சிக்கும் அவலம் தொடரும் நிலை உள்ளது.

காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம் அருகில், மேம்பால பணிக்காக, ஓராண்டுக்கு முன், சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது.அப்போது, சாலை நடுவே இருந்த மின் கம்பத்தை அகற்றாததால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.இக்கம்பத்தை மாற்றி அமைக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்தபோது, மின் வாரியம், 'கம்பத்தை அகற்ற, நெடுஞ்சாலைத் துறை, அதற்கான செலவு தொகையை கட்ட வேண்டும்' எனக்கூறி, அலட்சியப்படுத்தியது. இதனால், இரு மாதங்களுக்கு முன், சாலை நடுவே இருந்த மின் கம்பத்தின் மீது லாரி மோதி விபத்துக்கு உள்ளானது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, தனியார் பஸ் மோதியதில், அதே இடையூறு மின்கம்பம் சாய்ந்தது. இதனால், யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.தகவலறிந்த மின் வாரியத்தினர், நேற்று காலை வந்து, அந்த கம்பத்தை அகற்றி, அதே இடத்தில் புதிய கம்பத்தை நட முயன்றனர்.அங்கு வந்த சிவகாஞ்சி காவல் ஆய்வாளர் நடராஜன், அடிக்கடி இங்கு விபத்து நடப்பதால், கம்பத்தை, சாலையோரம் நட வேண்டும் என, கேட்டுக்கொண்டார்.அதற்கு மின் வாரிய ஊழியர்கள், 'வேறு இடத்திற்கு மாற்ற, எங்களுக்கு அதிகாரம் கிடையாது. உயர் அதிகாரிகள் உத்தரவு வேண்டும். அதற்கான செலவு தொகையை, நெடுஞ்சாலைத் துறை கட்ட வேண்டும்' எனக்கூறி, கம்பத்தை நட்டனர்.இரு துறைகளின் அலட்சியத்தால், பொதுமக்கள் விபத்தில் சிக்கி, தவிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X