பொது செய்தி

தமிழ்நாடு

போலீஸ் டைரி

Added : ஜன 03, 2021
Share
Advertisement
13 கொத்தடிமைகள் மீட்புதிருவாலங்காடு: திருவாலங்காடு ஒன்றியம், கூடல்வாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் கோபி, 55. இவர், அதே பகுதியில் முயல்பண்ணை வைத்துள்ளார். இந்நிலையில், இந்த பண்ணையில், மூன்று இருளர் குடும்பத்தைச் சேர்ந்த, 13 பேர் கொத்தடிமைகளாக இருந்து வந்தனர்.இதையடுத்து, திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் சத்யா, 13 பேரையும் மீட்டனர். அதை தொடர்ந்து, திருத்தணி

13 கொத்தடிமைகள் மீட்புதிருவாலங்காடு: திருவாலங்காடு ஒன்றியம், கூடல்வாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் கோபி, 55. இவர், அதே பகுதியில் முயல்பண்ணை வைத்துள்ளார்.

இந்நிலையில், இந்த பண்ணையில், மூன்று இருளர் குடும்பத்தைச் சேர்ந்த, 13 பேர் கொத்தடிமைகளாக இருந்து வந்தனர்.இதையடுத்து, திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் சத்யா, 13 பேரையும் மீட்டனர். அதை தொடர்ந்து, திருத்தணி தாசில்தார் உமா அளித்த புகாரையடுத்து, திருவாலங்காடு போலீசார் வழக்கு பதிந்து, கோபியை தேடி வருகின்றனர். தீயில் கருகிய 20 ஏக்கர் கரும்புநகரி: சித்துார் மாவட்டம், நகரி அடுத்த, இருகுவாய் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கோவிந்தன், ஆனந்தன் மற்றும் லோகநாதன். இந்த மூன்று விவசாயிகள், 20 ஏக்கர் நிலப்பரப்பில் கரும்பு பயிரிட்டிருந்தனர்.தற்போது, அறுவடைக்கு தயாராக இருந்த கரும்பு தோட்டத்தில், மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது.

விவசாயிகள் மற்றும் நகரி தீயணைப்பு துறை வீரர்கள் வாகனத்துடன் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு, வாகனம் செல்வதற்கு சாலை வசதியில்லாததால், தீயணைப்பு வாகனம் செல்ல முடியவில்லை. இதனால், 20 ஏக்கர் கரும்பு தோட்டம் முழுதும் தீயில் கருகியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X