சென்னை : 'லோன் செயலி' வாயிலாக, மோசடி செய்த சீனாவைச் சேர்ந்த இருவர் உட்பட, நான்கு பேர் கைதாகி உள்ள நிலையில், கும்பலின் தலைவனை கைது செய்ய, 'இன்டர்போல்' போலீசாரின் உதவியை நாட முடிவு செய்யப்பட்டு உள்ளது.ச
மீபமாக, கந்துவட்டியை விட கொடுமையான, 'லோன் செயலி' வாயிலாக உடனடி கடனளித்து, மோசடியில் ஈடுபடும் கும்பல்களின் அட்டூழியம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இந்த செயலிகளை தரவிறக்கம் செய்யும் போதே, பான் கார்டு, ஆதார் எண் உள்ளிட்ட விபரங்களை பெற்றுவிடுவர்.அத்துடன், சட்டவிரோதமாக, கடன் கேட்பவரின் மொபைல் போனில் உள்ள தொடர்பு எண்கள் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் திருடுவர்.மிரட்டல் இந்த கும்பலிடம், 5,000 ரூபாய் கடன் கேட்டால், 1,500 ரூபாய் பிடித்தம் போக, 3,500 ரூபாய் கொடுப்பர். ஏழு நாட்களுக்குள், 5,000 ரூபாய் திரும்ப செலுத்த வேண்டும்.
தவறினால், 5,000 ரூபாய்க்கு, 36 சதவீதம் வீதம் வட்டிக்கு மேல் வட்டி செலுத்த வேண்டும். மறுத்தால், கடன் பெற்றவரின் உறவினர்கள், நண்பர்கள், அலுவலக அதிகாரிகள் என, அனைவரும் தொடர்பு கொள்வர். மிரட்டல் விடுத்து ஆபாசமாக பேசுவர். படத்துடன், மோசடி நபர் என முத்திரை குத்தி, சமூகவலைதளத்தில் பரப்புவர்.இந்த கும்பலிடம், 4 லட்சம் ரூபாய் வரை கடன் பெற்று சிக்கித் தவித்த, சென்னை வேங்கைவாசலையைச் சேர்ந்த கணேசன் என்பவர், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் மற்றும் கந்துவட்டி தடுப்பு பிரிவு போலீசார் விசாரித்து, கர்நாடக மாநிலம், பெங்களூரு சென்றனர்.300 கோடி ரூபாய்அங்கு, 110 பேருடன், 'கால் சென்டர்' நடத்தி, 50க்கும் மேற்பட்ட கடன் வழங்கும் செயலிகளை இயக்கி வந்த, சீனாவைச் சேர்ந்த ஜியா யமோ, ஊ யான்லுன்; பெங்களூரைச் சேர்ந்த பிரமோதா, பவன் ஆகியோரை கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில், 300 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி நடந்திருப்பது தெரிய வந்துள்ளது.
சீனாவைச் சேர்ந்த மோசடி கும்பலின் தலைவன் ஹாங், சிங்கப்பூரில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அவரை கைது செய்ய, 'இன்டர் போல்' எனும், அனைத்து நாட்டு குற்ற ஒழிப்பு காவல் துறை குழுவின் உதவியை நாட, போலீசார் முடிவு செய்துள்ளனர். இது குறித்து, போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:கைதானவர்களிடம் இருந்து, 10க்கும் மேற்பட்ட, 'லேப்டாப், மொபைல் போன்'கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
இவற்றை தடய அறிவியல் சோதனைக்கு உட்படுத்த உள்ளோம்.'நெட் ஒர்க்'சட்ட விரோதமாக, இந்தியாவுக்குள் ஊடுருவி இருக்கும் சீன நாட்டு கும்பல், தமிழகம் தவிர, மற்ற மாநிலங்களிலும் கைவரிசை காட்டி உள்ளது.இந்த கும்பலின், 'நெட் ஒர்க்' முழுவதையும் விசாரித்து வருகிறோம். கைதான நான்கு பேரையும், காவலில் எடுத்து விசாரிக்க உள்ளோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE