லாரி மோதி பெண் உயிரிழப்புபூந்தமல்லி: பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பம், பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர், சங்கர், 43. இவரது, மனைவி கண்ணகி, 39. இவர், வேலப்பன் சாவடியில் உள்ள, தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார். நேற்று முன்தினம் இரவு, பணி முடித்து, பூந்தமல்லி நெடுஞ்சாலை அணுகு சாலையில் நடந்த வந்தபோது, பின்னால் வந்த லாரி, கண்ணகி மீது மோதியது. இதில், லாரியின் சக்கரம் ஏறி இறங்கியதில், சம்பவ இடத்திலேயே, அவர் பலியானார்.
இது குறித்து, பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரித்து, விபத்துக்கு காரணமான கார் ஓட்டுனர் ராஜகோபால், 50, என்பவரை கைது செய்தனர்.வாலிபரின் உயிரை காவு வாங்கிய மதுவேளச்சேரி: திருப்போரூரைச் சேர்ந்தவர் அருண்குமார், 32; ஐ.டி., ஊழியர். மனைவி ரேவதி, 27. ஒன்றரை வயதில், ஒரு பெண் குழந்தை உள்ளது. அருண்குமார், நேற்று முன்தினம், வேளச்சேரி, வி.ஜி.பி., செல்வாநகரில் உள்ள, சித்தப்பா மகன் வீட்டுக்கு சென்றுள்ளார். இரவு, அங்கு தங்கிய நிலையில், அளவுக்கு அதிகமாக மது அருந்தி உள்ளார்.
அதிகாலையில், மார்பு வலியால் துடிதுடித்துள்ளார். மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில், அருண்குமார் பலியானார். வேளச்சேரி போலீசார் விசாரிக்கின்றனர்.ஓய்வுபெற்ற எஸ்.ஐ., உடல் மீட்புபீர்க்கன்காரணை: பீர்க்கன்காரணை, ஸ்ரீனிவாசா நகர், அருள் கருணாகரன் தெருவைச் சேர்ந்தவர், மேத்யூ, 62; ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர். குடும்பத்தை பிரிந்து வாழ்ந்து வந்த மேத்யூவிற்கு, உடல்நிலை சரியில்லாதபோது, அவரது மனைவி, பாக்கியவதி திலகம், 60, மற்றும் மகன் டைசன், 25, ஆகியோர், அவ்வப்போது வீட்டிற்கு வந்து, மருத்துவ மனைக்கு அழைத்து சென்று வந்தனர்.
டிச., 24ம் தேதி, மேத்யூவிற்கு மீண்டும், உடல்நிலை சரியில்லாமல் போனதால், அவரது மகன் சென்று, மருத்துவமனைக்கு அழைத்துள்ளதார்; மேத்யூ மறுத்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, 8:00 மணியளவில், மேத்யூ வீட்டில் இருந்து, துர்நாற்றம் வீசியதால், பீர்க்கன்காரணை போலீசாருக்கு, தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் பூட்டை உடைத்து, உள்ளே சென்று பார்த்ததில், மேத்யூ அழுகிய நிலையில், இறந்து கிடந்தார். போலீசார் உடலை மீட்டு விசாரிக்கின்றனர்.ஆட்டோ ஓட்டுனர் தற்கொலைதிருமுல்லைவாயல்: அம்பத்துாரை அடுத்த அயப்பாக்கத்தைச் சேர்ந்தவர் குணசேகரன், 33; ஆட்டோ ஓட்டுனர்.
இவரது மனைவி பிரியா, 29. குணசேகரன் மது அருந்தி தகராறில் ஈடுபட்டதால், அவரது மனைவி பிரிந்து சென்றார். இதனால் விரக்தி அடைந்த குணசேகரன், வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து, திருமுல்லைவாயல் போலீசார் விசாரிக்கின்றனர். வாலிபர் துாக்கிட்டு பலிபுதுவண்ணாரப்பேட்டை: தண்டையார்பேட்டை, ஒத்தவாடைத் தெருவைச் சேர்ந்தவர் தர்மன், 26; கார் ஓட்டுனர். இவருக்கு, எட்டு மாதங்களுக்கு முன் திருமணமாகியுள்ளது. இந்நிலையில், சில மாதங்களாக தர்மன், வேலையின்றி வீட்டில் இருந்துள்ளார். அப்போது, உறவினர்கள் வேலைக்கு செல்லக்கோரி, அறிவுறுத்தி உள்ளனர்.
வேலை இல்லாத விரக்தியில், மன உளைச்சலுக்கு ஆளானவர், நேற்று அதிகாலை, வீட்டின் கழிப்பறையில், துாக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். உடலை மீட்ட புதுவண்ணாரப் பேட்டை போலீசார், பிரேத பரிசோதனைக்காக, அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.கட்டட தொழிலாளி மரணம்திருமுல்லைவாயல்: கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சண்முகவேல், 66. இவர் அம்பத்துார், பாலாஜி நகரில் தங்கி, கட்டடப் பணிகளில் ஈடுபட்டு வந்தார்.
நேற்று முன்தினம் இரவு, நாற்காலியில் இருந்து திடீரென மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்த தகவலை தெரிவித்தனர். இது குறித்து, திருமுல்லை வாயல் போலீசார் விசாரிக்கின்றனர்.3வது தளத்திலிருந்து விழுந்தவர் பலிசெங்குன்றம்: செங்குன்றம் அடுத்த சென்றம்பாக்கம் பெருமாள் கோவில் தெருவில், தனியார் கல்லுாரி அறக்கட்டளை மூலம், புதிய அடுக்குமாடி கட்டடம் கட்டும் பணி நடக்கிறது. அதில், வேலுார் மாவட்டம், குடியாத்தம், சரஸ்வதிபுரத்தைச் சேர்ந்த ஸ்ரீதர், 19, தங்கியிருந்து, கட்டுமான வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் மதியம், 3வது தளத்தில் பணியில் ஈடுபட்டிருந்த போது, தவறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார்.
இதையடுத்து, ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி இரவு இறந்தார். இது குறித்து, செங்குன்றம் போலீசார் விசாரிக்கின்றனர்.லாரி மோதி பெண் உயிரிழப்புபூந்தமல்லி: பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பம், பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர், சங்கர், 43. இவரது, மனைவி கண்ணகி, 39. இவர், வேலப்பன் சாவடியில் உள்ள, தaனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார். நேற்று முன்தினம் இரவு, பணி முடித்து, பூந்தமல்லி நெடுஞ்சாலை அணுகு சாலையில் நடந்த வந்தபோது, பின்னால் வந்த லாரி, கண்ணகி மீது மோதியது. இதில், லாரியின் சக்கரம் ஏறி இறங்கியதில், சம்பவ இடத்திலேயே, அவர் பலியானார். இது குறித்து, பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரித்து, விபத்துக்கு காரணமான கார் ஓட்டுனர் ராஜகோபால், 50, என்பவரை கைது செய்தனர்.வாலிபரின் உயிரை காவு வாங்கிய மதுவேளச்சேரி: திருப்போரூரைச் சேர்ந்தவர் அருண்குமார், 32; ஐ.டி., ஊழியர். மனைவி ரேவதி, 27. ஒன்றரை வயதில், ஒரு பெண் குழந்தை உள்ளது. அருண்குமார், நேற்று முன்தினம், வேளச்சேரி, வி.ஜி.பி., செல்வாநகரில் உள்ள, சித்தப்பா மகன் வீட்டுக்கு சென்றுள்ளார். இரவு, அங்கு தங்கிய நிலையில், அளவுக்கு அதிகமாக மது அருந்தி உள்ளார். அதிகாலையில், மார்பு வலியால் துடிதுடித்துள்ளார். மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில், அருண்குமார் பலியானார். வேளச்சேரி போலீசார் விசாரிக்கின்றனர்.ஓய்வுபெற்ற எஸ்.ஐ., உடல் மீட்புபீர்க்கன்கரணை: பீர்க்கன்கரணை, ஸ்ரீனிவாசா நகர், அருள் கருணாகரன் தெருவைச் சேர்ந்தவர், மேத்யூ, 62; ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர்.குடும்பத்தை பிரிந்து வாழ்ந்து வந்த மேத்யூவிற்கு, உடல்நிலை சரியில்லாதபோது, அவரது மனைவி, பாக்கியவதி திலகம், 60, மற்றும் மகன் டைசன், 25, ஆகியோர், அவ்வப்போது வீட்டிற்கு வந்து, மருத்துவமனைக்கு அழைத்து சென்று வந்தனர்.டிச., 24ம் தேதி, மேத்யூவிற்கு மீண்டும், உடல்நிலை சரியில்லாமல் போனதால், அவரது மகன் சென்று, மருத்துவமனைக்கு அழைத்துள்ளதார்; மேத்யூ மறுத்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, 8:00 மணியளவில், மேத்யூ வீட்டில் இருந்து, துர்நாற்றம் வீசியதால், பீர்க்கன்கரணை போலீசாருக்கு, தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் பூட்டை உடைத்து, உள்ளே சென்று பார்த்ததில், மேத்யூ அழுகிய நிலையில், இறந்து கிடந்தார். போலீசார் உடலை மீட்டு விசாரிக்கின்றனர்.ஆட்டோ ஓட்டுனர் தற்கொலைதிருமுல்லைவாயல்: அம்பத்துாரை அடுத்த அயப்பாக்கத்தைச் சேர்ந்தவர் குணசேகரன், 33; ஆட்டோ ஓட்டுனர். இவரது மனைவி பிரியா, 29. குணசேகரன் மது அருந்தி தகராறில் ஈடுபட்டதால், அவரது மனைவி பிரிந்து சென்றார். இதனால் விரக்தி அடைந்த குணசேகரன், வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து, திருமுல்லைவாயல் போலீசார் விசாரிக்கின்றனர்.கட்டட தொழிலாளி மரணம்திருமுல்லைவாயல்: கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சண்முகவேல், 66. இவர் அம்பத்துார், பாலாஜி நகரில் தங்கி, கட்டடப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். நேற்று முன்தினம் இரவு, நாற்காலியில் இருந்து திடீரென மயங்கி விழுந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்த தகவலை தெரிவித்தனர். இது குறித்து, திருமுல்லைவாயல் போலீசார் விசாரிக்கின்றனர்.3வது தளத்திலிருந்து விழுந்தவர் பலிசெங்குன்றம்: செங்குன்றம் அடுத்த சென்றம்பாக்கம் பெருமாள் கோவில் தெருவில், தனியார் கல்லுாரி அறக்கட்டளை மூலம், புதிய அடுக்குமாடி கட்டடம் கட்டும் பணி நடக்கிறது. அதில், வேலுார் மாவட்டம், குடியாத்தம், சரஸ்வதிபுரத்தைச் சேர்ந்த ஸ்ரீதர், 19, தங்கியிருந்து, கட்டுமான வேலை செய்து வந்தார்.நேற்று முன்தினம் மதியம், 3வது தளத்தில் பணியில் ஈடுபட்டிருந்த போது, தவறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். இதையடுத்து, ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி இரவு இறந்தார்.இது குறித்து, செங்குன்றம் போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE