நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி துவங்கவில்லை
என்ற அறிவிப்பு, பா.ஜ., வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்திஉள்ளது. தி.மு.க.,
குடும்ப நெருக்கடி காரணமாகவே, ரஜினி இந்த முடிவை எடுத்ததாக, டில்லியில்
பேசப்படுகிறது.
ரஜினியின் அறிவிப்பு வரும் முன்பே, தமிழக அரசிடமிருந்து
உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு செய்தி வந்துவிட்டதாம். 'ரஜினி
அரசியலுக்கு நிச்சயம் வரமாட்டார்' என, போனில் சொல்லப்பட்டதாம்.இதையடுத்து,
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வியூகத்தை மாற்றுவது குறித்து, அமித் ஷாவும்,
பா.ஜ., தேசிய தலைவர் நட்டாவும், தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளனர்.
'பா.ஜ., -
அ.தி.மு.க., கூட்டணியை பலப்படுத்துவதே, சரியான முடிவு' என, இவர்கள்
கருதுவதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே, ரஜினியின் உடல்நிலை குறித்து,
பா.ஜ., தரப்பில் யாரும் விசாரிக்காதது, ரஜினி ரசிகர்களிடையே அதிருப்தியை
ஏற்படுத்தி உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE