ஆவடி : ஆவடியில், 'ஓசி கேக்' கேட்டு, பேக்கரியை சூறையாடிய வாலிபர்கள், ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆவடி, புதிய கன்னியம்மன் நகரைச் சேர்ந்தவர் சக்திவேல், 23. இவர், அதே பகுதியில், பேக்கரி கடை வைத்துள்ளார்.புத்தாண்டை முன்னிட்டு, கடந்த, 31ம் தேதி இரவு, அதே பகுதியைச் சேர்ந்த ஐந்து வாலிபர்கள், அங்கு சென்று கேக் கேட்டுள்ளனர். அப்போது பேக்கரி ஊழியர் அஜித்குமார், 21, என்பவர், பணம் தருமாறு கேட்டுள்ளார்.அதற்கு, 'நாங்கள் அனைவரும் இதே பகுதி தான், பணம் பின் தருகிறோம் கேக் உடனடியாக வேண்டும்' என கூறியுள்ளனர்.ஆனால் அஜித்குமார், 'உரிமையாளர் பேக்கரியில் இல்லை; கடன் தர முடியாது' என மறுத்துள்ளார்.ஆத்திரம் அடைந்த வாலிபர்கள், கடைக் கண்ணாடியை உடைத்து, கார, இனிப்பு வகைகளை கீழே தள்ளினர்.
மேலும், பேக்கரி ஊழியர்களை தகாத வார்த்தைகளால் பேசி, மிரட்டல் விடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.இது குறித்து, சக்திவேல் கண்காணிப்பு கேமரா ஆதாரத்துடன், ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளார். ஆனால், புகாரை வாங்காமல், திருப்பி அனுப்பியதாகக் கூறப்படுகிறது.இச்சம்பவம், சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதையடுத்து, உயர் அதிகாரிகளின் அழுத்தத்தால், வேறு வழியின்றி, ஆவடி டேங்க் பேக்டரி போலீசார், தகராறில் ஈடுபட்ட வாலிபர்களை, பிடித்து விசாரிக்கின்றனர்.இந்நிலையில், சம்பவத்தில் ஈடுபட்ட, அதே பகுதியைச் சேர்ந்த சத்யராஜ், 20, குணா, 22, விக்னேஷ், 22, வினோத், 27, கார்த்திக், 22, ஆகியோரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE