தினமலர் கோலத்திருவிழா போட்டியில் நீரின் மேல் அழியாமல் கோலம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தினமலர் கோலத்திருவிழா போட்டியில் நீரின் மேல் அழியாமல் கோலம்

Added : ஜன 03, 2021
Share
கோலம் கலையாமல் இருக்க, மழை வேண்டாமென வேண்டியிருப்பீர்கள். ஆனால், நீரிலே கோலம் போட்டு பார்த்துள்ளீர்களா...? இதோ, நீரின் அடியில், நீரின் மேல் அழியாமல் இருக்கும் வகையில் கிரியேட்டிவ் ஐடியாக்களுடன், தனித்துவமிக்க கோலங்களை, நமது தினமலர்கோலப்போட்டியில் வாசகியர் படைத்திருந்தனர்.பெண்களின் கோலத்திறமைகளை, கவுரவிக்கும்வகையில், 'தினமலர்' நாளிதழ் மற்றும் போத்தீஸ் இணைந்து,

கோலம் கலையாமல் இருக்க, மழை வேண்டாமென வேண்டியிருப்பீர்கள். ஆனால், நீரிலே கோலம் போட்டு பார்த்துள்ளீர்களா...? இதோ, நீரின் அடியில், நீரின் மேல் அழியாமல் இருக்கும் வகையில் கிரியேட்டிவ் ஐடியாக்களுடன், தனித்துவமிக்க கோலங்களை, நமது தினமலர்கோலப்போட்டியில் வாசகியர் படைத்திருந்தனர்.பெண்களின் கோலத்திறமைகளை, கவுரவிக்கும்வகையில், 'தினமலர்' நாளிதழ் மற்றும் போத்தீஸ் இணைந்து, மார்கழி மாத கோலப்போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
நேற்று, கே.கே.புதுார், வடவள்ளி, துடியலுார் பகுதிகளை சேர்ந்த, நான்கு அபார்ட்மென்ட்களில் போட்டிகள் நடந்தன.ஒவ்வொன்றும் ஒருவிதம்பக்கத்து வீட்டு வாசலில், கோலப்புத்தகத்தில்...ஏன் ஆன்லைனிலும் பார்க்கமுடியாத தனித்துவமிக்க கோலங்களை வாசகியர் படைத்திருந்தனர். நீர் சேமிப்பு மற்றும் மரங்களை பாதுகாப்பதன் அவசியத்தை கண்முன் உணர்த்திய பூமி கோலம்,50க்கும் மேற்பட்ட புள்ளிகளாலான கோலம், விதம், விதமான பூக்களை கொண்டு அமைக்கப்பட்ட அத்தப்பூ கோலம், பெண் மற்றும் தோகை விரித்திருக்கும் மயிலை தத்ரூபமாக கொண்ட கோலம், மீனாட்சி அம்மன் கோலம்...இப்படி அத்தனை கோலங்களும் 'ஆசம்!' துடியலுார், என்.ஜி.ஜி.ஓ., காலனி, போகன் வில்லா அபார்ட்மென்டில் நடந்த கோலப் போட்டியில், ரங்கோலி பிரிவில், சுப்ரியா, சினேஹா, சரண்யா மற்றும் 'ஆர்ட்' பிரிவில், காயத்ரி, சாந்தி, கலைவாணி பரிசுகளை வென்றனர். புள்ளி கோலத்தில், மகேஸ்வரி, சாந்தி, கார்த்திகா ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அபார்ட்மென்ட், குடியிருப்பு சங்க துணை தலைவர் தர்மராஜ், செயலாளர், தேவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கே.கே.புதுார், பட்டீஸ்வரர் அபார்ட்மென்ட்ல் நடந்த போட்டியில் ரங்கோலி பிரிவில், ஐஸ்வர்யா, ஜெயஸ்ரீ, கீதா ஆகியோர் வெற்றி பெற்றனர். புள்ளி கோலத்தில், தீரலட்சுமி, சந்திரா, சாந்தம்மா ஆகியோருக்கு பரிசு வழங்கப்பட்டது. அபார்ட்மென்ட் செயலாளர் சந்திரா கலந்துகொண்டு வெற்றியாளர்களுக்கு, பரிசுகளை வழங்கினார். வடவள்ளி, ஸ்ரீ தக் ஷாஸ் மிரிஸ்ட்னா (Mritsna) அபார்ட்மென்டில் நடந்த போட்டியில், ரங்கோலி பிரிவில், யசோதா, லதா பிரியா, விஜயலட்சமி வென்றனர். 'ஆர்ட்' பிரிவில், கவிதா, பூக்கோலத்தில், ரேணுகாதேவி, புள்ளி கோலத்தில், மஞ்சு ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ரேவதி என்பவர் ஆறுதல் பரிசை பெற்றார். அபார்ட்மென்ட் குடியிருப்பு சங்க தலைவர் நந்தகுமார், செயலாளர் ராமச்சந்திரன், பொருளாளர் கோட்டீஸ்வரன் ஆகியோர் விழாவை சிறப்பாக ஒருங்கிணைத்தனர். பீளமேடு, ஸ்ரீராம் விஜயா ஹைடி பார்க் (Hyyde) அபார்ட்மென்ட்டில் நடந்த போட்டியில், ரங்கோலி பிரிவில், ஆஷா மற்றும் சரண்யா, தமயந்தி மற்றும் வித்யா, ஹன்சிகா மற்றும் பிரசிதா ஆகியோர் பரிசுகளை பெற்றனர். 'ஆர்ட்' பிரிவில், பாலசுந்தரி மற்றும் சாந்தா, சுமிதா மற்றும் ஸ்ரேயா, பூங்கொடி மற்றும் சிவகாமி ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அத்தப்பூ கோலத்தில், சஷ்விதா மற்றும் வனிதா வென்றனர். அபார்ட்மென்ட் குடியிருப்பு சங்க தலைவர் ஆனந்த கிருஷ்ணன், செயலாளர், சாந்தி பொருளாளர் சாமிநாதன் ஆகியோர் விழாவை ஒருங்கிணைத்தனர்.
கவுண்டம்பாளையம் நித்யா என்கிளேவில் நடந்த கோலப்போட்டியில், பாமினி, ராதிகா, சித்ரா, சாந்தி ஆகியோர் பரிசுகளை வென்றனர். போட்டியாளர்களுக்கு, 'லோகன்ஸ்' முககவசம் இலவசமாக வழங்கப்பட்டது. பங்கேற்ற அனைவருக்கும் கண்ணன்ஸ் காபி, சைக்கிள் அகர்பத்தி, ஜீவி மரச்செக்கு எண்ணெய், தனுஷ் மார்க் இட்லி, எஸ்.வி., ஆயில் வழங்கப்பட்டது. கோலப்போட்டி நிகழ்ச்சிகள், 'யுடிவியில்' மாலை, 5:00 முதல் 6:00 மணி வரை ஒளிபரப்பப்படுகிறது. போட்டியாளர்கள் பார்த்து ரசிக்கலாம்.உங்களையும் வரவேற்கிறோம்!கோலப்போட்டியில் பங்கேற்க விரும்புவோர், முன்பதிவு செய்து கலந்து கொள்ளலாம். போட்டிகள், வரும் 9, 10 ஆகிய தேதிகளில், காலை, 8:00 முதல், மாலை, 4:00 மணி வரை நடைபெறும். கோவை நகர அபார்ட்மென்ட்களில் வசிப்போர், தங்களது குடியிருப்போர் நல சங்க 'லெட்டர் பேடில்', கலந்து கொள்பவரின் பெயர், பிளாட் எண், மொபைல் எண் மற்றும் போட்டியில் கலந்துகொள்ள விரும்பும் தேதி, நேரம் குறிப்பிட்டு, 87540 33032 என்ற 'வாட்ஸ்ஆப்' எண்ணுக்கு அனுப்பி பதிவு செய்யலாம்.
'கியூட்' குட்டி கோலங்கள்குழந்தைகளின் கிறுக்கல்களிலும் ஒரு அழகு ஓவியம் ஒளிந்திருக்கும். அம்மாக்களுக்கு போட்டியாக தங்களுக்கு தெரிந்த பூ, நட்சத்திரம், பறவை போன்ற குட்டி ஓவியங்களை குழந்தைகள் போட்டிருந்தனர். சிலர், அச்சு கோலத்தட்டுகளை வைத்து விநாயகர், லட்சுமி என என பல்வேறு உருவங்களை போட்டு, பிடித்த வண்ணங்களை மனம் போல துாவினர். அனைத்தும் கியூட்!

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X