இசையில் மூழ்க வைத்த நிர்மலா ராஜசேகரின் வீணை!

Added : ஜன 03, 2021
Share
Advertisement
'பார்த்தசாரதி சுவாமி சபா, கர்நாடிகா குளோபல்' மற்றும் அப்பல்லோ மருத்துவமனை இணைந்து நடத்தும் 'குளோபல் ஹெரிடேஜ் ஆர்ட்ஸ் விழா - 2020'ன் நிகழ்வுகள், நேரலையாக நம்மை வந்தடைந்தன. இதில், நிர்மலா ராஜசேகரின் வீணை இசையை கேட்கப் பெற்றோம். ஸ்ரீநிவாசன் மிருதங்கத்திலும், பாலாஜி சந்திரன் கடவாத்தியத்திலும், பக்கவாத்தியம் வாசித்தனர்.நிர்மலா ராஜசேகர் வாசித்து அளித்த பாடல்கள்

'பார்த்தசாரதி சுவாமி சபா, கர்நாடிகா குளோபல்' மற்றும் அப்பல்லோ மருத்துவமனை இணைந்து நடத்தும் 'குளோபல் ஹெரிடேஜ் ஆர்ட்ஸ் விழா - 2020'ன் நிகழ்வுகள், நேரலையாக நம்மை வந்தடைந்தன. இதில், நிர்மலா ராஜசேகரின் வீணை இசையை கேட்கப் பெற்றோம். ஸ்ரீநிவாசன் மிருதங்கத்திலும், பாலாஜி சந்திரன் கடவாத்தியத்திலும், பக்கவாத்தியம் வாசித்தனர்.நிர்மலா ராஜசேகர் வாசித்து அளித்த பாடல்கள் இதோ:இதில், இரண்டாவதாக வந்த பாடலுக்கு, ஓர் அறிமுக ஆலாபனை, பல்லவிக்கு கற்பனை ஸ்வரங்களை சுவாரசியமாக அமைந்திருந்தார்.

அதே போல தியாகராஜரின், 'நாதலோலுடை...' பாடலை, சட்டென்று எடுத்து, அதில் தானும் மூழ்கி, நம்மையும் மூழ்கச் செய்தார். இதைத் தானே, தியாகராஜரும் இப்பாடல் மூலம், நமக்கு அறைகூவலாகவே விடுத்துள்ளார்!பாடல் - நான்கு, ஒரு துரிதகதியில் நாம் கேட்டுப் பழக்கப்பட்ட ஒன்று. அதை, அதன் போக்கிலேயே வாசித்து, அதற்கடுத்து வந்த, சாவேரி ராகத்தில், முருகா முருகாவையும், கலாவதியையும் நல்ல விளம்ப காலத்தில் கொடுத்தது, இசையின் மீது அவருக்குள்ள நாட்டத்தையும், இசையில் எவ்வளவு முதிர்ந்த கலைஞர் இவர் என்பதையும் நமக்கு உணர்த்திச் சென்றது.

இவர் ஒரு சாதாரணக் கலைஞர் இல்லை. அமெரிக்கப் பிரஜை என்றாலும், வருடம் தவறாது, சென்னை வந்திருந்து இசை விழாவில் பங்கேற்பவர். உலகளவில், பல ஹிந்துஸ்தானி மற்றும் மேற்கத்திய இசையாளுமைகளுடன் இணைந்து, பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றும், ஒருங்கிணைத்தும் நடத்தியுள்ளவர்.இவரின் மெயின், 'கல்யாணி' ராகம். பாடல் 'ஏதாவுனரா...' அளித்த ஆலாபனையில், வீணையில் துணிந்து மேற்கொள்ளக்கூடிய பிரயோகங்கள், இரண்டு தந்திகளையும் தொட்டுக்கொண்டே வாசித்தல்,ஆலாபனையை அடுத்து உயர்ந்த அளவில் அமைந்த தானம்.உரிய இடத்தில், உரிய அளவிற்கு கற்பனை ஸ்வரங்களும் வந்தன.

கடைசியில் துக்கடா இல்லாமலா? கடைசியில் கொடுத்த இரண்டு பாடல்களிலும், கவனம் குன்றாமல் அதே சிரத்தையுடன் அளித்தது தான், இவரது தனிச்சிறப்பு.வீணையின் மென்மைத் தன்மையை மனதில் வைத்து, பாடல்களுக்கு உடன் வாசித்த லயப்பிரியர்கள், ஸ்ரீநிவாசனும், பாலாஜி சந்திரனும், தனியின் போது, தங்களை விரிவுபடுத்திக் கொண்டு லயக்கணக்கு வேலைப்பாடுகளுடன், தாங்கள் கற்றுணர்ந்ததை நமக்கு ஓர் அனுபவமாகக் கொடுத்தனர்.- எஸ்.சிவகுமார்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X