சென்னை : 'டாடா மோட்டார்ஸ் - டிகோர்' கார், மிகவும் பாதுகாப்பானது' என, உரிமையாளர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
சென்னையில், 'டாடா மோட்டார்ஸ்' நிறுவனம் சார்பில், 'டிகோர்' ரக கார்களின் உரிமையாளர்கள் சந்திப்பு, நேற்று நடந்தது.இந்நிகழ்ச்சியில், டாடா மோட்டார்ஸ் உடன் இணைந்து, 'டிகோர் உரிமையாளர்கள் கிளப் இந்தியா' அமைப்பினர் பங்கேற்றனர்.அமைப்பின், சென்னை குழு ஒருங்கிணைப்பாளர், எஸ்.ஹரீஷ், 30, கூறியதாவது:'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட இந்த கார், கார்களின் பாதுகாப்பில், நான்கு நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளது.டாடா டிகோர் காரில், ஓட்டுனர் மற்றும் அவரது, அருகில் உள்ள இருக்கைகளில், இரண்டு ஏர் பேக்குகள், '7 இன்ச் டச் ஸ்கிரீன் இன்போடைன்மென்ட் சிஸ்டம், 8 ஸ்பீக்கர் ஹார்மேன் ஆடியோ, புரஜெக்டர் ஹெட்லேம்பஸ்' உட்பட, பல வீத அம்சங்கள் உள்ளன.
குறைந்தபட்சம், 5.50 முதல் அதிகபட்சம், 7.50 லட்சம் ரூபாய் விலையில், கார் கிடைக்கிறது. இவ்வாறு, அவர் கூறினார்.தொடர்ந்து, 'வோக்கல் பார் லோக்கல்' என்ற தலைப்பில், காரை விளம்பரப்படுத்தும் விதமாக, வண்டலுார் -- மீஞ்சூர் வெளிவட்ட சாலை துவங்கி, மாமல்லபுரம் வரை, 50 கி.மீ., துாரத்திற்கு, கார் உரிமையாளர்களின் பேரணி நடந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE