திட்டக்குடி : ராமநத்தம் அருகே வெறிநாய்கள் கடித்ததால் காயமடைந்த புள்ளிமான் இறந்தது.
ராமநத்தம் அருகிலுள்ள நாங்கூர் காப்புக்காட்டில் இருந்து குடிநீர் மற்றும் உணவுக்காக வெளியேறும் மான்கள் வழிதவறி கிராமங்களுக்குள் புகுந்து விடுகின்றன.ஆலத்தூர் ஊராட்சிக்குட்பட்ட சித்துார் கிராமத்தில் நேற்று காலை சுற்றித்திரிந்த மானை வெறி நாய்கள் துரத்திச்சென்று கடித்தன.காயமடைந்த மான் சித்துார் பஸ் நிறுத்தம் அருகே இறந்து கிடந்தது. தகவலறிந்த வனத்துறையினர் மானின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனை செய்து, காப்புக்காட்டில் புதைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE