தமிழ்நாடு

தடை! ஆன்லைன் மூலம் கிளிகள் விற்பனைக்கு .... விற்பனையில் ஈடுபட்டோருக்கு காப்பு

Updated : ஜன 04, 2021 | Added : ஜன 03, 2021
Share
Advertisement
சென்னை : 'ஆன்லைன்' வழியாக, தடை செய்யப்பட்ட, கிளி விற்பனையில் ஈடுபட்ட, ஐந்து பேரை கைது செய்த வனத்துறை அதிகாரிகள், அவர்களுக்கு அபராதம் விதித்தனர். அரியவகை கிளிகளில் ஒன்றான, பெரிய பச்சை கிளிகள் பல்வேறு மாநிலத்தில் உள்ளன. இவை, சாதாரண பச்சை கிளிகள் போல் இருக்கும்.ஆனால், கழுத்தில் வளைய வடிவில் சிவப்பு நிறம், இறகில் சிவப்பு நிறம் மற்றும் பெரிய அலகு கொண்டதாக இருக்கும்.
தடை! ஆன்லைன் மூலம் கிளிகள் விற்பனைக்கு .... விற்பனையில் ஈடுபட்டோருக்கு காப்பு

சென்னை : 'ஆன்லைன்' வழியாக, தடை செய்யப்பட்ட, கிளி விற்பனையில் ஈடுபட்ட, ஐந்து பேரை கைது செய்த வனத்துறை அதிகாரிகள், அவர்களுக்கு அபராதம் விதித்தனர்.

அரியவகை கிளிகளில் ஒன்றான, பெரிய பச்சை கிளிகள் பல்வேறு மாநிலத்தில் உள்ளன. இவை, சாதாரண பச்சை கிளிகள் போல் இருக்கும்.ஆனால், கழுத்தில் வளைய வடிவில் சிவப்பு நிறம், இறகில் சிவப்பு நிறம் மற்றும் பெரிய அலகு கொண்டதாக இருக்கும். பேச்சுத்திறன் அதிகம் இருப்பதால், வளர்ப்பதற்கு பலரும் விரும்புவர்.ஆனால், இந்திய வன உயிரின பாதுகாப்பு சட்டம், 1972ன் படி, அழிவின் விழிம்பில் உள்ள உயிரினங்கள் பட்டியலில், நான்காவது வகையில் இடம் பெற்றுள்ளன. இந்த கிளிகள் விற்க, வனத்துறை தடை செய்துள்ளது.ஆனால், சென்னையில், இந்த கிளிகள் ஜோடி, 3,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதற்காக, சிலர் சமூக வலைதளங்கள் வழியாக, விளம்பரம் செய்து விற்பனை செய்கின்றனர்.

வனத்துறையினர், நேற்று, குழுக்கள் அமைத்து, சென்னை முழுதும் ஆய்வு நடத்தினர். இதில், ராயபுரம், சாந்தோம் மற்றும் பாரிமுனை பகுதியில், கிளி குஞ்சுகள் விற்பனை செய்த, ஐந்து பேரை பிடித்தனர்.அக்குபஞ்சர் மருத்துவர், முகம்மது ரமலி, 56, முத்துசெல்வன், 20, ஜெகன், 31, கார்த்திக், 35, சதீஷ்குமார், 27, ஆகியோரை, வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து, 35 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.மேலும், அவர்களிடம் இருந்து, 53 பெரிய கிளி குஞ்சுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இது குறித்து, வனத்துறை அதிகாரி எடிசன் கூறியதாவது: தடைசெய்யப்பட்ட கிளிகளை, வீட்டில் வளர்ப்பது சட்டப்படி குற்றம். தெரிந்தோ, தெரியாமலோ வீட்டில் கிளி வளர்த்தால், உடனே, வேளச்சேரியில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.அப்படி ஒப்படைத்தால், அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டோம். கிளிகள் மட்டுமில்லாமல், வன உயிரினங்கள் சார்ந்து எதையும் விற்கவோ, வளர்க்கவோ கூடாது. விதமீறி செயல்படுவோர் குறித்து, 044 -2220 0335 மற்றும் 95661 84292 என்ற எண்ணில் தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X