பொது செய்தி

தமிழ்நாடு

இயந்திரங்கள் வருகை; நெல் அறுவடை தீவிரம்

Added : ஜன 03, 2021
Share
Advertisement
பேரூர்:வெளிப்பகுதிகளில் இருந்து இயந்திரங்கள் வந்ததையடுத்து, காத்திருந்த விவசாயிகள் அறுவடையில் தீவிரம் காட்டுகின்றனர்.தொண்டாமுத்துார் வட்டாரத்தில், சாடிவயல், சீங்கப்பதி, பூண்டி தண்ணீர் பந்தல், முட்டத்துவயல், நல்லுார் வயல் உள்ளிட்ட பகுதிகளில், பொங்கலை எதிர்நோக்கி நெல் சாகுபடி செய்யப்படும். கடந்தஆண்டு தென்மேற்கு பருவமழை, எதிர்பார்த்ததை விட அதிகளவில்

பேரூர்:வெளிப்பகுதிகளில் இருந்து இயந்திரங்கள் வந்ததையடுத்து, காத்திருந்த விவசாயிகள் அறுவடையில் தீவிரம் காட்டுகின்றனர்.தொண்டாமுத்துார் வட்டாரத்தில், சாடிவயல், சீங்கப்பதி, பூண்டி தண்ணீர் பந்தல், முட்டத்துவயல், நல்லுார் வயல் உள்ளிட்ட பகுதிகளில், பொங்கலை எதிர்நோக்கி நெல் சாகுபடி செய்யப்படும். கடந்தஆண்டு தென்மேற்கு பருவமழை, எதிர்பார்த்ததை விட அதிகளவில் பெய்தது.அதையடுத்து,செப்.,ல் வெள்ளப் பொன்னி, பவானி, ஐ.ஆர் - 20, பிபிடி., ஆகிய ரகங்கள் நடவு செய்யப்பட்டன. டிச., மாதத்தில் நெற்கதிர்கள் அறுவடைக்கு தயாராகின.வெளிப்பகுதிகளில் இருந்து வரும், அறுவடை இயந்திரங்களுக்காக விவசாயிகள் காத்திருந்தனர். தற்போது, சின்ன சேலம் உள்ளிட்ட பகுதியில் இருந்து, இயந்திரங்கள் வந்துள்ளன. அவ்வப்போது மழைப்பொழிவு காணப்படுவதால், அறுவடை பணிகளில் விவசாயிகள் தீவிரம் காட்டுகின்றனர்.விவசாயி மணி கூறுகையில், ''ஏக்கருக்கு, ரூ. 20 ஆயிரம் செலவிடப்பட்டது. நல்ல விளைச்சல் கண்டுள்ளதால்ஏக்கருக்கு, 30 மூட்டை கிடைக்கும் வாய்ப்புள்ளது. குறைந்த வாடகையில் இயந்திரங்கள் கிடைக்க, அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X