சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரியபெருமானூர் தார் சாலையை புதுப்பிக்க நடவடிக்கை

Added : ஜன 03, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி : அரியபெருமானுாரில் இருந்து விளைநிலங்கள் வழியாக ரங்கநாதபுரம் கிராமத்திற்கு செல்லும் தார் சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் விவசாயிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். கள்ளக்குறிச்சி அடுத்த அரியபெருமானுாரில் இருந்து விளைநிலங்கள் வழியாக ரங்கநாதபுரத்திற்கு செல்ல தார்சாலை போடப்பட்டுள்ளது. இப்பகுதியில் 500 ஏக்கருக்கு மேற்பட்ட விளைநிலங்கள்
 அரியபெருமானூர் தார் சாலையை புதுப்பிக்க நடவடிக்கை

கள்ளக்குறிச்சி : அரியபெருமானுாரில் இருந்து விளைநிலங்கள் வழியாக ரங்கநாதபுரம் கிராமத்திற்கு செல்லும் தார் சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் விவசாயிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த அரியபெருமானுாரில் இருந்து விளைநிலங்கள் வழியாக ரங்கநாதபுரத்திற்கு செல்ல தார்சாலை போடப்பட்டுள்ளது. இப்பகுதியில் 500 ஏக்கருக்கு மேற்பட்ட விளைநிலங்கள் உள்ளன.விவசாயிகள் தங்களது நிலங்களில் விளைவித்த கரும்பு, நெல், சோளம், பருத்தி உள்ளிட்ட விவசாய பொருட்களை அறுவடை செய்து, கனரக வாகனங்களில் ஏற்றி கள்ளக்குறிச்சியில் மார்க்கெட் கமிட்டிக்கு கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர். இந்த சாலையில் அரியபெருமானுார் முதல் ரங்கநாதபுரம் வரையிலான 1 கி.மீ., துார தார் சாலை குண்டும், குழியுமாக உள்ளது.

அப்பகுதியில் நடைபெறும் உயர்மின்கோபுரம் அமைக்கும் பணிக்காக பல்வேறு கனரக வாகனங்கள் செல்வதால், சாலை சேதமடைந்ததாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். இதனால், விவசாயிகள் தங்களது விளைபொருட்களை கனரக வாகனங்களில் ஏற்றி செல்ல முடியாமல் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.எனவே, அரியபெருமானுார் விளைநிலப்பகுதி வழியாக செல்லும் தார் சாலையினை புதுப்பித்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X