கள்ளக்குறிச்சி, : கள்ளக்குறிச்சி கோட்டைமேடு புதிய காவலர் குடியிருப்பு கட்டுமானப் பணிகள் முடிந்து பல மாதங்களாகியும், இதுவரை திறப்பு விழா காணப்படாமல் உள்ளது.
கள்ளக்குறிச்சி காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்குட்பட்ட கள்ளக்குறிச்சி, சின்னசேலம், தியாகதுருகம், கச்சிராயபாளையம், வரஞ்சரம், கீழ்குப்பம், கரியாலுார் மற்றும் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையம் என 8 போலீஸ் நிலையங்கள் உள்ளன.இந்த போலீஸ் நிலையங்களில் பணிபுரியும் போலீசார் குடியிருப்பு கோட்டைமேட்டில் பழைய காவலர் குடியிருப்புகளை இடித்து அகற்றிவிட்டு புதிதாக குடியிருப்புகள் கட்டுமானப் பணி துவங்கியது.
தமிழ்நாடு போலீஸ் ஹவுசிங் கார்ப்பரேஷன் மூலம் 2.64 கோடி ரூபாய் மதிப்பில் 24 புதிய காவலர் குடியிருப்புகள் மற்றும் ஒரு இன்ஸ்பெக்டர் குடியிருப்பு கட்டி முடிக்கப்பட்டது. தற்போது பணிகள் முடிந்து பல மாதங்களாகியும் புதிய காவலர் குடியிருப்பு திறப்பு விழா காணப்படாமல் உள்ளது.இதனால், இரவு நேரங்களில் சிலர் மது அருந்துவது போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, கட்டி முடிக்கப்பட்டு காட்சிப் பொருளாக உள்ள காவல் குடியிருப்பை விரைவில் திறக்க உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE