கள்ளக்குறிச்சி : காரனுார் கிராமத்தில் யாருக்கும் பயனின்றி நுாலக கட்டடம் மூடிக்கிடக்கிறது.
கள்ளக்குறிச்சி அடுத்த காரனுார் கிராமத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நுாலகம் கட்டப்பட்டது. இந்த நுாலகத்தில், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொது மக்கள் பயன்படுத்தி வரும் நிலையில் நாளிதழ்கள், வார இதழ்கள் உள்ளிட்ட பத்திரிகைகள் கொண்டு வரப்பட்டு வந்தன.கடந்த சில மாதங்களாக இந்த நுாலக கட்டடம் திறக்கப்படாமல் மூடியே கிடக்கும் நிலை உள்ளது. இதனால் வாசகர்கள், மாணவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். கல்வி வளர்சிக்கு பயனுள்ளதாக அமைந்துள்ள இந்த நுாலகத்தை, திறந்து மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE