விழுப்புரம் L அப்துல்கலாம் கூறியதுபோன்று, அ.தி.மு.க., வில் கனவு கண்டால், பதவி கிடைக்கும் என அமைச்சர் சண்முகம் பேசினார்.
விழுப்புரம் கரும்பு விவசாயிகள் மண்டபத்தில், கோலியனுார் தெற்கு, வடக்கு ஒன்றியம் மற்றும் வளவனுார் பேரூராட்சி அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, அ.தி.மு.க., மாவட்ட செயலாளரான அமைச்சர் சண்முகம் தலைமை தாங்கினார். கோலியனுார் தெற்கு ஒன்றிய செயலாளர் சுரேஷ்பாபு, வடக்கு ஒன்றிய செயலாளர் மற்றும் ஆவின் சேர்மன் முருகன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் முருகவேல், மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளர் பசுபதி, வளவனுார் பேரூராட்சி செயலாளர் சங்கரலிங்கம் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், அமைச்சர் சண்முகம் பேசியதாவது;எம்.ஜி.ஆர்., இருந்தவரை கருணாநிதியை கோட்டை பக்கம் வர விடவில்லை. அதன் பின் கட்சியில் ஏற்பட்ட பிளவு காரணமாக, கருணாநிதி வெற்றி பெற்றார். நாம் ஒற்றுமையாக இருந்தால், ஸ்டாலின் மட்டுமல்ல யாராலும் அ.தி.மு.க.,வை தோற்கடிக்க முடியாது.இந்த தேர்தல் வாழ்வா, சாவா என்ற காலக்கட்டத்தில் அ.தி.மு.க., உள்ளது. இந்த தேர்தலில், நாம் வெற்றி பெற வேண்டும் என கட்டாயத்தில் உள்ளோம். மீண்டும் எம்.ஜி.ஆர்.,-ஜெ.,வின் ஆட்சி முதல்வர் பழனிச்சாமி தலைமையில் அமைய வேண்டும்.விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டசபை தொகுதிகளிலும், அ.தி.மு.க., வெற்றி பெற வேண்டும்.அப்துல்கலாம் கூறியதுபோன்று, அ.தி.மு.க.,வினர் கனவு காணுங்கள். அ.தி.மு.க., வில் கனவு கண்டால், பதவி கிடைக்கும்.விழுப்புரத்தில் உள்ள பொன்முடி, தி.மு.க., தலைவராக கனவு காண கூறுங்கள் பார்ப்போம்.
அப்படி, கனவு கண்டால், பொன்முடியின் கழுத்தை, கனவிலேயே கருணாநிதி நெறித்து விடுவார்.இவ்வாறு அமைச்சர் சண்முகம் பேசினார்.முன்னாள் ஒன்றிய சேர்மன் விஜயா சுரேஷ்பாபு, மாவட்ட மாணவரணி சக்திவேல், நகர கூட்டுறவு வங்கி தலைவர் தங்கசேகர், தகவல் தொழில்நுட்ப பிரிவு வேலுார் மண்டல பொருளாளர் ஜெகதீஸ்வரி சத்யராஜ், ஜெ., பேரவை செயலாளர் விஜயன், மாவட்ட பிரதிநிதிகள் அருள், ஜெயக்குமார், மாணவர் அணி தலைவர் ராமதாஸ், செயலாளர்கள் பாக்கியராஜ், வழக்கறிஞர் பாக்கியராஜ், துணை செயலாளர் தவமணி, தொழில்நுட்பபிரிவு செயலாளர்கள் சத்தியராஜ், சுந்தர்ராஜ், இளைஞர் பாசறை செயலாளர் ராகவன், மகளிர் அணி தலைவி பிரேமா முருகன், ஒன்றிய இணை செயலாளர்கள் கிருஷ்ணகுமாரி ஏழுமலை , மஞ்சுளா சசிக்குமார், மகளிர் அணி செயலாளர் இந்துமதி, ரமேஷ், முன்னாள் கவுன்சிலர் ராஜி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE