பொது செய்தி

தமிழ்நாடு

கணினி பயிற்றுநர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கல்

Added : ஜன 03, 2021
Share
Advertisement
zzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzகணினி பயிற்றுநர்களின் நிலை 1 பணியிடங்களுக்கான கலந்தாய்வில், தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.விழுப்புரம் மாவட்டத்தில் 2018-19ம் கல்வி ஆண்டில் அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 57, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 29 கணினி பயிற்றுநர்களின் நிலை 1 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆசிரியர் தேர்வு

zzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzz

கணினி பயிற்றுநர்களின் நிலை 1 பணியிடங்களுக்கான கலந்தாய்வில், தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.விழுப்புரம் மாவட்டத்தில் 2018-19ம் கல்வி ஆண்டில் அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 57, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 29 கணினி பயிற்றுநர்களின் நிலை 1 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வில் தேர்ச்சி பெற்ற பணிநாடுநர்களில் தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு இணையவழி நியமன கலந்தாய்வு நடந்தது.

விழுப்புரம் சி.இ.ஓ., அலுவலகத்தில், ஒருங்கிணைந்த மாவட்டத்திற்கான கலந்தாய்வு கடந்த 2ம் தேதி மற்றும் நேற்று நடந்தது. இதில், விழுப்புரம் மாவட்டத்தில் 10 பேர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 8 பேர் தேர்வாகினர். இவர்களுக்கான பணி நியமன ஆணையை, விழுப்புரம் சி.இ.ஓ., கிருஷ்ணப்பிரியா, கள்ளக்குறிச்சி சி.இ.ஓ., முனுசாமி வழங்கினர்.அப்போது, நேர்முக உதவியாளர் காளிதாஸ், கண்காணிப்பாளர் கோகலக்கண்ணன், உதவியாளர்கள் மாதவன், ராஜலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X