காசர்கோடு: கேரளாவில், வீட்டின் மீது சொகுசு பஸ் விழுந்ததில், கர்நாடகாவைச் சேர்ந்த ஏழு பேர், பரிதாபமாக இறந்தனர்.
பலர் காயம் அடைந்தனர்.கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமை யிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. கர்நாடக மாநிலம் சுல்லியா பகுதியைச் சேர்ந்த 65 பேர், கேரள மாநிலம் காசர்கோடில் நடக்கும் திருமணத்துக்காக, நேற்று சொகுசு பஸ்சில் வந்தனர். காசர்கோடு அருகே பனாத்துார் பகுதியில், மலைப் பாதையில் வந்து கொண்டிருந்த போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், ஒரு வீட்டின் மீது விழுந்தது.
இதில், பஸ்சில் பயணம் செய்த, ஏழு பேர் இறந்தனர். பலர் காயம் அடைந்தனர். பஸ் விழுந்த வீட்டில் யாரும் வசிக்காததால், பெரிய அளவில் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE