திருப்பூர்:வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம் சார்பில், வீரபாண்டிய கட்டபொம்மன், 262வது பிறந்தநாள் மற்றும் கொடியேற்று விழா நேற்று கொண்டாடப்பட்டது.மாநில அவைத்தலைவர் மணி, ஆலோசகர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தனர். புதிய பஸ் ஸ்டாண்ட், எம்.எஸ்., நகர், பாப்பநாயக்கன்பாளையம், பொம்மநாயக்கன்பாளையம், மண்ணரை, கோவிந்தம்பாளையம், பாளையக்காடு உள்ளிட்ட, 30 இடங்களில் பண்பாட்டு கழக கொடியேற்றப்பட்டது.வாகனங்களில் ஊர்வலமாக வந்த, 300 பேர், மண்ணரை சோதனைச்சாவடியில் இருந்து கொடிகளுடன், கோஷம் எழுப்பி பாரப்பாளையம் பிரிவு வரை நடந்து வந்தனர். அங்குள்ள கட்டபொம்மன் சிலைக்கு முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன்ராவ் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர். அன்னதானம் வழங்கப்பட்டது.பா.ஜ., சார்பில்...திருப்பூர் வடக்கு மாவட்ட எம்.எஸ்., நகர் மண்டல பா.ஜ., சார்பில், கட்டபொம்மன் பிறந்த நாள் விழா அப்பகுதியில் நேற்று கொண்டாடப்பட்டது. அவரது படத்துக்கு மலர் துாவி கட்சியினர் மரியாதை செலுத்தினர்.மாநில செயற்குழு உறுப்பினர் சின்னசாமி, மாவட்ட துணை தலைவர் பாலசுப்ரமணியம், ஓ.பி.சி., அணி மாவட்ட பொது செயலாளர் தீபா, மண்டல தலைவர் வேலுசாமி உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE