பொது செய்தி

தமிழ்நாடு

ஆர்பிட்ரே வழக்குகளுக்கு தீர்வு காண தீவிரம்

Added : ஜன 03, 2021
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூரில், 15 பின்னலாடை சங்கங்கள் இணைந்து, ஆர்பிட்ரேசன் கவுன்சிலை இயக்குகின்றன. ஆடை உற்பத்தி, நிட்டிங், டையிங் என அனைத்து வகை ஜாப்ஒர்க் சார்ந்த நிறுவனங்களின், நிதி சார்ந்த பிரச்னைகளுக்கு, இந்த கவுன்சில், தீர்வு ஏற்படுத்துகிறது.புகார் அளிப்பவர் மற்றும் எதிர்தரப்பினர் என, இருதரப்பும் ஏற்றுக்கொள்ளும்வகையிலும், துரிதமாகவும் பிரச்னைகளுக்கு தீர்வு

திருப்பூர்:திருப்பூரில், 15 பின்னலாடை சங்கங்கள் இணைந்து, ஆர்பிட்ரேசன் கவுன்சிலை இயக்குகின்றன. ஆடை உற்பத்தி, நிட்டிங், டையிங் என அனைத்து வகை ஜாப்ஒர்க் சார்ந்த நிறுவனங்களின், நிதி சார்ந்த பிரச்னைகளுக்கு, இந்த கவுன்சில், தீர்வு ஏற்படுத்துகிறது.புகார் அளிப்பவர் மற்றும் எதிர்தரப்பினர் என, இருதரப்பும் ஏற்றுக்கொள்ளும்வகையிலும், துரிதமாகவும் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படுகிறது. இதனால், அனைத்து நிறுவனங்களும், பிரச்னைகள் ஏற்படும்போது, ஆர்பிட்ரேசன் கவுன்சிலையே அணுகுகின்றன. கொரோனாவால், கடந்த மார்ச் மாதம் முதல், விசாரணைகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்கு வந்துள்ளது. இதையடுத்து, ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்குகளுக்கான விசாரணையை ஆர்பிட்ரேசன் கவுன்சில் தற்போது துவக்கியுள்ளது; புதிய வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுவருகின்றன.இதன் தலைவர் கருணாநிதி கூறியதாவது:பல்வேறுவகை நிறுவனங்களால் தொடரப்பட்ட, ரூ.1.25 கோடி மதிப்பிலான, 12 வழக்குகள் நிலுவையில் உள்ளன. நோட்டீஸ் அனுப்பப்பட்டு, வழக்குகளை முடிப்பதற்கான பணிகளை துவக்கியுள்ளோம்.சாய ஆலை உட்பட அனைத்து ஜாப்ஒர்க் நிறுவனங்களும், மெஷின் கொள்முதல் செய்யும்போது, அதற்கான ஒப்பந்தத்தில், ஆர்பிட்ரேசன் விதிமுறைகளை அச்சிடவேண்டும். அதேபோல், ஆடை உற்பத்தி நிறுவனங்கள், நுால் கொள்முதல் ஒப்பந்தத்திலும், விதிமுறைகளை அச்சிடவேண்டும்.புதிய மெஷின்களின் பழுது ஏற்பட்டு, அதனால், இருதரப்பினரிடையே பிரச்னைகள் உருவாகின்றன. இதுபோன்ற சூழல்களில், ஆர்பிட்ரேசன் கவுன்சில் தலையிட்டு, சிக்கல்களை தீர்த்துவைக்க உதவும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X