திருப்பூர்:திருப்பூர் வளையங்காட்டில் நேற்று பா.ஜ., சார்பில், மத்திய அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது.மாநில துணைத் தலைவர் அண்ணாமலை பேசியதாவது:நாடு பாதுகாப்பாக உள்ளது. முதன் முறையாக, சுதந்திரத்துக்கு பின், பாக்., எல்லைக்குள் சென்று போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியது.மோடி பிரதமரான பின், இந்தியாவில், 1.50 கோடி போலி ரேசன் கார்டுகள் ஒழிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் வங்கிக்கணக்கில், நேரடியாக 6 ஆயிரம் ரூபாய் சென்றடைகிறது. இதுபோன்று பல்வேறு திட்டங்கள் நேரடியாக மக்களை சென்றடைகிறது.தொண்டாமுத்துாரில் தி.மு.க., கூட்டத்தில் ஸ்டாலினிடம் கேள்வி கேட்ட பெண்ணை வெளியில் தி.மு.க.,வினர் கடுமையாக தாக்கினர். அரசியல் தலைவன் என்றால், எந்த ஒரு பொதுக்கூட்டத்திலும், யாரை வேண்டுமானாலும் சந்திக்க தயாராக இருக்கவேண்டும். ஸ்டாலின் நிச்சயமாக முதல்வராக வாய்ப்பு இல்லை. தகுதியுமில்லை. வரும் சட்டசபை தேர்தல், தர்மத்துக்கும், அதர்மத்துக்கும் நடக்க கூடிய யுத்தம்.இவ்வாறு, அவர் பேசினார்.கூட்டத்துக்கு,அங்கேரிபாளையம் மண்டல தலைவர் சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் செந்தில்வேல் முன்னிலை வகித்தார். வர்த்தக பிரிவு தலைவர் அன்பழகன் வரவேற்றார். மாநில பொது செயலாளர் செல்வகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.முன்னதாக அண்ணாமலை நிருபர்களிடம் கூறுகையில், ''மத்திய அரசின் சாதனைகள் ஒவ்வொரு மாவட்டமாக, ஒவ்வொரு கிராமமாக, ஒவ்வொரு தனி மனிதனையும் சென்றுள்ளது. கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் குறித்த நிலைபாட்டை, தலைமை அதிகாரபூர்வமாக அறிவிக்கும்'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE