பந்தலுார்:நீலகிரி ஆதிவாசி கூட்டமைப்பு சார்பில், செயலாளர் நீலகண்டன், மாநில முதல்வர்; மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனு:கூடலுார் மற்றும் பந்தலுார் பகுதிகளில் நான்கு வகையான பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். மாவட்டத்தில், 25 ஆயிரம் பழங்குடிகள் உள்ள நிலையில், இவர்களுக்கு சிறப்பு மருத்துவமனை இல்லை.இதனால், நோயாளிகள் கேரளா மாநிலம் வயநாடு மற்றும் கோழிக்கோடு அல்லது கோவை மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டி உள்ளது. எனவே, பழங்குடியின மக்கள் மட்டும் பயன் பெறும் வகையில், அனைத்து வசதிகளுடன் கூடிய சிறப்பு மருத்துவமனை அமைத்து தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE