குன்னுார்:தேயிலை சாகுபடியில், தரம், மகசூலை உயர்த்த மேற்கொள்ளும் வழிமுறைகளை தேயிலை வாரியம் அறிவுரை வழங்கியுள்ளது.நீலகிரி மாவட்டத்தில் தற்போது மழை குறைந்து, பனியின் தாக்கமும், சராசரி வெப்பமும் அதிகரித்துள்ளது. தேயிலை தோட்டங்களில் நிழல் மரங்களின் எண்ணிக்கையும் குறைந்து காணப்படுகிறது.இதனால், தற்போது, தேயிலை செடிகளில் முதிர்ந்த இலைகளின் அடியில் சிவப்பு சிலந்தி தாக்குதல் ஏற்பட்டு, மகசூல் குறைகிறது. ஜன., முதல் மார்ச் வரை இந்த சிவப்பு சிலந்தி தாக்குதலால், இலை பைகள் மற்றும் கால்நடைகள் மூலமும் பரவ வாய்ப்புள்ளது.இந்த வகை சிலந்தி பூச்சி தாக்குதலால் பாதிக்கப்பட்ட தேயிலை தோட்டங்களுக்கு கட்டுப்படுத்தும் முறைகளை மேற்கொள்ள 'உபாசி' ஆராய்ச்சி மையம் அறிவுரை வழங்கியுள்ளது.தேயிலை வாரிய செயல் இயக்குனர் பாலாஜி கூறுகையில்,''தேயிலை செடிகளில் சிவப்பு சிலந்தி தாக்குதல் கட்டுப்படுத்த, 'நனையும் சல்பர்; ப்ராபார்கேட்; பாரபீனிக் ஆயில்' பயன்படுத்துவது அவசியம். வேர்களின் வளர்ச்சிக்கு, மணிச்சத்து உரத்துடன், 'முசூரி பாஸ்பேட்; ராக் பாஸ்பேட்; சிட்ரிக் அமிலத்துடன் கலந்து தழை சாம்பல்' உரக்கலவையுடன் வீச்சு முறையில் இட வேண்டும். ஜன., பிப். மாதங்களில் இலைகளின் நீராவி போக்கை கட்டுப்படுத்தி வறட்சியின் பாதிப்பை தாங்க, 'உரம், யூரியா, மூரியேட் ஆப் பொட்டாஷ், கிரீன் மிராக்கிள்' ஆகியவை தண்ணீருடன் சேர்த்து தெளிக்க வேண்டும்,''என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE