அரசியல் செய்தி

தமிழ்நாடு

நிர்வாகிகளை விமர்சிப்பதா? கார்த்தி சிதம்பரத்திற்கு பதிலடி!

Added : ஜன 03, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை: தமிழக காங்கிரசுக்கு நியமிக்கப்பட்ட, புதிய நிர்வாகிகள் பட்டியலை விமர்சித்த, கார்த்தி சிதம்பரத்திற்கு, தமிழக காங்., துணைத் தலைவர்கள் கோபண்ணா, பொன்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பதிலடி கொடுத்துள்ளனர்.தமிழக காங்கிரசில், மாநில நிர்வாகிகளும், மாவட்ட தலைவர்களும், தேர்தல் பணிக்குழு என, பல்வேறு குழுக்களுக்கு புதிய நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டனர். இந்த நியமனம் தொடர்பாக,

சென்னை: தமிழக காங்கிரசுக்கு நியமிக்கப்பட்ட, புதிய நிர்வாகிகள் பட்டியலை விமர்சித்த, கார்த்தி சிதம்பரத்திற்கு, தமிழக காங்., துணைத் தலைவர்கள் கோபண்ணா, பொன்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பதிலடி கொடுத்துள்ளனர்.

தமிழக காங்கிரசில், மாநில நிர்வாகிகளும், மாவட்ட தலைவர்களும், தேர்தல் பணிக்குழு என, பல்வேறு குழுக்களுக்கு புதிய நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டனர். இந்த நியமனம் தொடர்பாக, கார்த்தி சிதம்பரம் எம்.பி., தன் டுவிட்டர் பதிவில், 'இவ்வளவு பெரிய கமிட்டியால், எந்த பயனும் இல்லை' என்றார். அவரது கருத்துக்கு, தமிழக காங்., நிர்வாகிகள் மத்தியில், கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

துணை தலைவர் கோபண்ணா கூறுகையில், ''சிவகங்கை மாவட்ட காங்., கமிட்டியில், 12 துணை தலைவர்கள், 16 பொதுச் செயலர்கள், 30 செயலர்கள், 25 இணை செயலர்கள் நியமிக்கப் பட்டிருக்கும் போது, தமிழக காங்., நிர்வாகிகள் எண்ணிக்கை குறித்து பேச, என்ன உரிமை இருக்கிறது; ஊருக்கு உபதேசம், தமக்கில்லையோ,'' என்றார்.

மற்றொரு துணைத் தலைவர் பொன்.கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், ''கார்த்தி சிதம்பரம் விமர்சித்திருப்பது, கட்சி நலனுக்கு எதிரானது. இதுபோன்ற கருத்துக்கள், புதிய நிர்வாகிகளை பலவீனப்படுத்தும். அ.தி.மு.க.,வில் கிளை செயலர்கள் அமைச்சர்களான வரலாறு உண்டு. இந்த பட்டியலில் கட்சிக்கு உழைத்த சாமனியர்கள் இடம் பெற்றுள்ளனர்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R. Vidya Sagar - Chennai,இந்தியா
04-ஜன-202111:58:13 IST Report Abuse
R. Vidya Sagar போச்சு, குடும்பத்துக்குளேயே கோஷ்டி சண்டை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X