அரசியல் செய்தி

தமிழ்நாடு

குழப்பம் ஏற்படுத்தும் அமைச்சர் கருப்பணன் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., குற்றச்சாட்டு

Added : ஜன 03, 2021
Share
Advertisement
சென்னிமலை: ''என் பெருந்துறை தொகுதியில், சமீபகாலமாக பல குழப்பங்களை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் ஏற்படுத்தி வருகிறார்,'' என, அ.தி.மு.க.,- எம்.எல்.ஏ., வெங்கடாச்சலம் குற்றம் சாட்டினார்.ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் நேற்று அவர் அளித்த பேட்டிபெருந்துறை தொகுதியில், சமீப காலமாக பல குழப்பங்களை, அமைச்சர் கருப்பணன் ஏற்படுத்தி வருகிறார்.அரசியல் ரீதியாக, என்னை

சென்னிமலை: ''என் பெருந்துறை தொகுதியில், சமீபகாலமாக பல குழப்பங்களை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் ஏற்படுத்தி வருகிறார்,'' என, அ.தி.மு.க.,- எம்.எல்.ஏ., வெங்கடாச்சலம் குற்றம் சாட்டினார்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் நேற்று அவர் அளித்த பேட்டிபெருந்துறை தொகுதியில், சமீப காலமாக பல குழப்பங்களை, அமைச்சர் கருப்பணன் ஏற்படுத்தி வருகிறார்.அரசியல் ரீதியாக, என்னை எதிர்கொள்ள முடியாமல், கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டம் முதல், பெருந்துறைக்கு வர வேண்டிய, அனைத்து மக்கள் நலத் திட்டங்களுக்கும், முட்டுக்கட்டை போட்டு வருகிறார்.

மாவட்ட செயலர் என்ற மரபை, காற்றில் பறக்கவிட்டு அ.தி.மு.க.,வை தன் குடும்பச் சொத்து போலவும், அதற்கு அவர் மேனேஜர் போலவும் நடந்து கொள்கிறார். நேற்று முன்தினம் நடக்க இருந்த, மாவட்ட விற்பனை குழு தலைவர் தேர்தலை, என்னிடமும், மூத்த அமைச்சர் செங்கோட்டையனிடம் கலந்து பேசாமல், தன்னிச்சையாக நிறுத்துகிறார்.நான்கு ஆண்டுகளாக, நிர்வாகிகள் கூட்டம் கூட போட முடியாதவர் கருப்பணன். சில தொகுதிகளுக்கு வேட்பாளரை அறிவிக்கும் அளவுக்கு, தான் தோன்றித்தனமாக செயல்படுகிறார்.தன் தொகுதியில் கவனம் செலுத்தாமல், பெருந்துறை தொகுதியில் குழப்பம் செய்வதை, மக்கள் ஏற்க மாட்டார்கள்.அமைச்சர் பதவியை புண்ணியத்துக்கு பயன்படுத்துங்கள்; பாவத்துக்கு பயன்படுத்தாதீர்கள்.தினை விதைத்தால் தினை விளையும்; வினை விதைத்தால் வினையைத் தான் அறுவடை செய்வீர்கள்.அமைச்சரின் தான்தோன்றித்தனமான செயலை, முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் செல்வோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

அமைச்சர் பதில்

அமைச்சர் கருப்பணன் கூறியதாவது:மாவட்ட செயலர் என்ற முறையில், யார் வந்தாலும் கட்சியில் சேர்த்து கொள்ளும் பணியில் ஈடுபடுகிறேன். அரசின் திட்டங்கள் எந்த தொகுதியில் நடந்தாலும், அதை நான் ஏன் தடுக்க வேண்டும். நம் மாவட்டத்துக்கு, 6, 7ம் தேதிகளில் முதல்வர் வருகிறார். இந்த நேரத்தில் இப்படிப்பட்ட குற்றச்சாட்டு தேவையற்றது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X