பெரம்பலுார்: -அ.தி.மு.க., அரசின், 'அம்மா மினி கிளினிக்' திட்டத்தை, தி.மு.க.,வை சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் பாராட்டி பேசினார்.
அரியலுார், மேலணிக்குழி கிராமத்தில், அம்மா மினி கிளினிக் துவக்க விழா, கடந்த, 31ம் தேதி நடந்தது. இதில், அரசு தலைமை கொறடா ராஜேந்திரன், ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ., ராமஜெயலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.விழாவில், மேலணிக்குழி பஞ்., தலைவராக உள்ள, தி.மு.க.,வை சேர்ந்த முத்துக்குமார சுவாமி பேசியதாவது:இந்த கிராமத்திற்கு, மருத்துவமனை வேண்டும் என்பது, இந்தப் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை. நான் பஞ்சாயத்து தலைவராக பொறுப்பேற்ற போது, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,விடம் கோரிக்கை வைத்தேன்.
மறுநிமிடமே என் கோரிக்கை ஏற்கப்பட்டு, தற்போது, மருத்துவமனை திறப்பு விழாவும் நடந்து விட்டது. இதைக் கொண்டு வந்த தமிழக அரசுக்கும், அரசு தலைமை கொறடா ராஜேந்திரன், எம்.எல்.ஏ., ராமஜெயலிங்கத்துக்கும் நன்றி.இவ்வாறு, அவர் பேசினார்.மினி கிளினிக் திட்டத்தை, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், கடுமையாக விமர்சித்து பேசி வரும் நிலையில், தி.மு.க.,வைச் சேர்ந்த பஞ்., தலைவர், அ.தி.மு.க., அரசை பாராட்டி பேசியது, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE