அரசியல் செய்தி

தமிழ்நாடு

அணில் போல செயல்படுங்கள்: மந்திரி யோசனை

Added : ஜன 03, 2021
Share
Advertisement
கோவை: தமிழ்நாடு விஸ்வகர்மா கைவினைஞர்கள் சங்கத்தின், 44வது செயற்குழு கூட்டம், கோவை காந்தி பார்க்கில் நடந்தது. இதில், பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதாவது:விஸ்வகர்மா சமுதாய மக்கள், யார் பக்கம் நிற்கிறார்களோ, அவர்கள் வெற்றி பெற்று ஆளக்கூடிய தகுதியை பெறுவர். தியாகராஜ பாகவதருக்கு மணி மண்டபம் கட்ட வேண்டும் என மனு கொடுத்த உடன், 110 விதியின் கீழ், அதை முதல்வர்

கோவை: தமிழ்நாடு விஸ்வகர்மா கைவினைஞர்கள் சங்கத்தின், 44வது செயற்குழு கூட்டம், கோவை காந்தி பார்க்கில் நடந்தது.

இதில், பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதாவது:விஸ்வகர்மா சமுதாய மக்கள், யார் பக்கம் நிற்கிறார்களோ, அவர்கள் வெற்றி பெற்று ஆளக்கூடிய தகுதியை பெறுவர். தியாகராஜ பாகவதருக்கு மணி மண்டபம் கட்ட வேண்டும் என மனு கொடுத்த உடன், 110 விதியின் கீழ், அதை முதல்வர் இ.பி.எஸ்., அறிவித்தார். அ.தி.மு.க., ஆட்சி அமைய விஸ்வகர்மா சமூகம், அணில் போல செயல்பட வேண்டும். ஆன்மிக ஆட்சியை நடத்தக்கூடிய வல்லமை, அ.தி.மு.க.,வுக்கு மட்டுமே உள்ளது. அ.தி.மு.க., ஆட்சிக்கு ஒரு படிக்கல்லாக நாம் இருந்தோம் என, வரலாறு பேச வேண்டும். சமுதாய வளர்ச்சிக்கு, என்ன கேட்டாலும், அரசு சார்பில் செய்து தருவோம்.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X