சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அடிப்படை வசதிகள் இல்லை: கண்டித்து ஆர்ப்பாட்டம்

Added : ஜன 04, 2021
Share
Advertisement
பந்தலுார்:பந்தலுார் அருகே, கிராமத்துக்கு சாலை வசதி கேட்டு, ஆர்ப்பாட்டம் நடந்தது.பந்தலுார் அருகே, தேவாலா பகுதியில் மூச்சு குன்னு வடக்கு கிராமம் அமைந்துள்ளது. இங்கு, 75 குடியிருப்புகள் அமைந்துள்ளன. இப்பகுதி மக்கள் நடந்து செல்ல கடந்த, 60 ஆண்டுகளுக்கும் மேலாக மண் சாலையை பயன்படுத்தி வருகின்றனர். ஒரு கிலோ மீட்டர் துாரம் உள்ள இந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி, மாவட்ட கலெக்டர்

பந்தலுார்:பந்தலுார் அருகே, கிராமத்துக்கு சாலை வசதி கேட்டு, ஆர்ப்பாட்டம் நடந்தது.பந்தலுார் அருகே, தேவாலா பகுதியில் மூச்சு குன்னு வடக்கு கிராமம் அமைந்துள்ளது. இங்கு, 75 குடியிருப்புகள் அமைந்துள்ளன. இப்பகுதி மக்கள் நடந்து செல்ல கடந்த, 60 ஆண்டுகளுக்கும் மேலாக மண் சாலையை பயன்படுத்தி வருகின்றனர். ஒரு கிலோ மீட்டர் துாரம் உள்ள இந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி, மாவட்ட கலெக்டர் பொதுமக்கள் சந்தித்து மனு அளித்தனர். இதை அடுத்து, நெல்லியாளம் நகராட்சி மூலம் சாலை சீரமைக்க, நுழைவு வரி மூலம் நிதி ஒதுக்கீடு செய்து, பணிகள் நடத்த உத்தரவிடப்பட்டது. இரண்டு ஆண்டுகள் கடந்தும் பணிகள் நடக்கவில்லை.இதனால், அதிருப்தி அடைந்த மக்கள், நேற்று காலை, கிராம நிர்வாகி, சிவா தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிராம தலைவர்கள் தமிழ் செல்வம் மற்றும் முனியாண்டி முன்னிலை வகித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், 'அரசு அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்,' என, உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து, மக்கள் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X