பொது செய்தி

தமிழ்நாடு

கிராம சர்வே வரைபடங்களை டிஜிட்டல் மயமாக்க உத்தரவு

Added : ஜன 04, 2021
Share
Advertisement
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளின் கிராம வரைபடங்களை, மக்கள் எளிதில் பயன்படுத்தும் வகையில், டிஜிட்டல் மயமாக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில், ஒவ்வொரு கிராமத்துக்கு உட்பட்ட நிலங்களும், சர்வே எண் வாரியாக அளவை செய்யப்பட்டு, வரைபடங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையிலேயே, நில உடைமை நடைமுறைகள் மேற்கொள்ளப்படுகின்றன.நில அளவை துறையால்

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளின் கிராம வரைபடங்களை, மக்கள் எளிதில் பயன்படுத்தும் வகையில், டிஜிட்டல் மயமாக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில், ஒவ்வொரு கிராமத்துக்கு உட்பட்ட நிலங்களும், சர்வே எண் வாரியாக அளவை செய்யப்பட்டு, வரைபடங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையிலேயே, நில உடைமை நடைமுறைகள் மேற்கொள்ளப்படுகின்றன.நில அளவை துறையால் தயாரிக்கப்பட்ட வரைபடங்கள், வருவாய்த் துறை பயன்பாட்டில் உள்ளன. இந்த வரைபடங்களை, டிஜிட்டல் முறைக்கு மாற்றும் பணிகள், இறுதி கட்டத்தில் உள்ளன.

தற்போதைய நிலவரப்படி, கிராம வரைபடங்களை மக்கள் நேரடியாக பெற முடியாத நிலை உள்ளது. இந்த வரைபடங்கள், வெளிப்படையாக மக்கள் பயன்பாட்டுக்கு வந்தால், நிலங்கள் தொடர்பான பல்வேறு பிரச்னைகள் தடுக்கப்படும்.இது குறித்து, வருவாய்த் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:தமிழகத்தில், டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட்டு வரும் கிராம வரைபடங்கள், விரைவில், மக்களின் நேரடி பயன்பாட்டுக்கு வரவுள்ளன. முதற்கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு உட்பட்ட கிராம வரைபடங்களை, மக்கள் பயன்படுத்தும் வகையில், ஆன்லைன் வசதி அறிமுகமாகிறது

.இதனால், வீடு, மனை வாங்குவோர், சர்வே எண் அடிப்படையில், சம்பந்தப்பட்ட நிலத்தின் அமைப்பு, அளவு உள்ளிட்ட தகவல்களை எளிதாக பெற முடியும். இதற்கான பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளன.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X