சென்னை: தமிழக பா.ஜ., சார்பில், அனைத்து மாவட்டங்களிலும், வரும், 9, 10ம் தேதிகளில், 'நம்ம ஊரு பொங்கல்' என்ற பெயரில், பொங்கல் விழா நடத்தப்பட உள்ளது.
பா.ஜ., மாநில தலைவர் முருகன், 9ம் தேதி காலை, 10:00 மணிக்கு, ராமநாதபுரத்தில், 'நம்ம ஊரு பொங்கல்' நிகழ்ச்சியை துவக்கி வைக்கிறார். மறுநாள் மேட்டுப்பாளையத்தில் நடக்கும் நிகழ்ச்சியில், தமிழக பா.ஜ., மேலிட பொறுப்பாளர், சி.டி.ரவி கலந்து கொள்கிறார்.நடிகையர்
குஷ்பு, கவுதமி, நமீதா, காயத்ரி ரகுராம், இசையமைப்பாளர் கங்கை அமரன், நடிகர் ராதாரவி, இயக்குனர் பேரரசு உட்பட திரையுலக பிரமுகர்கள், அனைத்து மாவட்டங்களில் நடக்கும், பொங்கல் விழாவில் பங்கேற்கின்றனர்.விழாவில், ஆயிரக்கணக்கான பெண்கள், பொங்கல் வைக்க உள்ளனர். தமிழகத்தின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் போன்றவற்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE