சென்னை: கட்டட அனுமதிக்கான கால வரம்பை, 10 ஆண்டுகளுக்கு நீட்டிக்க, தமிழக அரசு பரிசீலித்து வருகிறது.தமிழகத்தில், நகர், ஊரமைப்பு சட்டப்படி, கட்டுமான திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
இந்த அனுமதி சான்று, முதலில் மூன்றாண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியானது. இந்த வரம்பு போதாது என்ற கோரிக்கை எழுந்ததால், பின், ஐந்து ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டது. பொது கட்டட விதிகளிலும், இந்த புதிய கால வரம்பு ஐந்து ஆண்டுகளாகவே உள்ளது. இதற்கு மேல் அவகாசம் தேவைப்படும் நிலையில், மூன்று ஆண்டுகள் வரை நீட்டித்துக்கொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஊரடங்கால், கட்டுமான துறை முடங்கியுள்ள நிலையில், இந்த புதிய வரம்பு போதாது என்று, கூறப்படுகிறது. கட்டுமான துறையினர் கூறியதாவது: தற்போதைய சூழலில், பெரிய அளவிலான கட்டுமான திட்டங்களை, ஐந்து ஆண்டுகளுக்குள் முடிக்க முடியாது. எனவே, இதில் மூன்று ஆண்டு நீட்டிப்பு போதுமானதாக இல்லை.எனவே, கட்டட அனுமதிக்கான நிலையான கால வரம்பு, 10 ஆண்டுகளாக உயர்த்தப்பட வேண்டும். இதில், பெரிய குடியிருப்பு திட்டங்களுக்கு மட்டும், இந்த சலுகையை வழங்குவதற்கான சாத்திய கூறுகளை, அரசு பரிசீலித்து வருகிறது.
ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய நடைமுறைகளுக்கு பிரச்னை ஏற்படாதவாறு, இதை செயல்படுத்த சட்ட வல்லுனர்களின் கருத்துகள் பெறப்பட்டு, உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட உள்ளன.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE