சென்னை: தெலுங்கு தேசம் கட்சியின், எம்.எல்.சி., - பிடெக் ரவி, ஆந்திரா மாநில போலீசாரால், நேற்று இரவு, சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
கர்நாடகா மாநிலம், பெங்களூரில் இருந்து, தனியார் விமானம் நேற்று இரவு, 8:15 மணிக்கு சென்னைக்கு வந்தது. அந்த விமானத்தில், ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்த, தெலுங்கு தேசம் கட்சியின் எம்.எல்.சி.,யான, பிடெக் ரவி என்ற, ரவிந்திரா ரெட்டி வந்தார்.அப்போது, அங்கு வந்த ஆந்திர மாநில போலீசார், பிடெக் ரவியை கைது செய்து, ஆந்திராவிற்கு அழைத்து சென்றனர்.
இது குறித்து, விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், 'ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தில், அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சொந்த ஊரான புவிவந்தலாவில், 2018ல் கலவரம் நடந்தது. இந்த வழக்கில் தொடர்புடையதாக, தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த, எம்.எல்.சி.,யான, பிடெக் ரவி கைது செய்யப்பட்டார்' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE