கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஆக்கிரமிப்பு கடைகளால் விபத்து அபாயம்: ஐகோர்ட்

Added : ஜன 04, 2021
Share
Advertisement
மதுரை: 'சாலையோரம் மற்றும் பிளாட்பாரம் பாதசாரிகள் பயன்பாட்டிற்குரியது. அவற்றை ஆக்கிரமித்து வியாபாரம் செய்வோரால், விபத்து ஏற்படுகிறது. இந்த அபாயத்தில் இருந்து, மக்களை பாதுகாக்க வேண்டும்' என, உயர் நீதிமன்ற கிளை தெரிவித்தது.திருச்சியில் சாலையோர கடையை அகற்ற, மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை, மாநகராட்சி கமிஷனர் தள்ளுபடி செய்தார். இதை

மதுரை: 'சாலையோரம் மற்றும் பிளாட்பாரம் பாதசாரிகள் பயன்பாட்டிற்குரியது. அவற்றை ஆக்கிரமித்து வியாபாரம் செய்வோரால், விபத்து ஏற்படுகிறது.

இந்த அபாயத்தில் இருந்து, மக்களை பாதுகாக்க வேண்டும்' என, உயர் நீதிமன்ற கிளை தெரிவித்தது.திருச்சியில் சாலையோர கடையை அகற்ற, மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை, மாநகராட்சி கமிஷனர் தள்ளுபடி செய்தார். இதை எதிர்த்து, உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கலானது.நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு உத்தரவு:போலீஸ் கமிஷனர் மற்றும் அரசின் தடையில்லா சான்று இல்லாமல், சாலையோரத்தில் எவ்விதத்திலும் வணிகத்திற்கு கடைகள் ஒதுக்கீடு செய்ய, திருச்சி மாநகராட்சிக்கு உரிமை இல்லை. அவ்வாறு அனுமதித்தால் அது சட்டவிரோதம்.சாலையோரம் மற்றும் பிளாட்பாரங்கள் பாதசாரிகள் பயன்பாட்டிற்கு உரியவை. அவற்றை ஆக்கிரமித்து வியாபாரம் செய்வோரால், மக்கள் வேறு வழியின்றி, சாலையில் நடந்து செல்லும் கட்டாயத்திற்கு ஆளாகின்றனர். இதனால், விபத்து ஏற்படுகிறது. இந்த அபாயத்தில் இருந்து, மக்களை பாதுகாக்க வேண்டும்.கோவை மாநகராட்சி சட்டப்படி - இது திருச்சி மாநகராட்சிக்கும் பொருந்தும் - மாநகராட்சிக்கு உட்பட்ட தெரு அல்லது பொது இடத்தில் எவ்விதத்திலும் சுவர் கட்டுமானம் அல்லது வேலி அமைத்தல் அல்லது ஆக்கிரமிப்பு ஏற்படுத்தக் கூடாது. இம்மனு ஏற்புடையதல்ல. தள்ளுபடி செய்கிறோம். கடையை காலி செய்ய, மனுதாரருக்கு அவகாசம் அளிக்கப்படுகிறது. தவறினால், போலீஸ் பாதுகாப்புடன் அகற்ற, மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X