பொது செய்தி

தமிழ்நாடு

ஊராட்சி தலைவரின் நேர்மை: வலைதளங்களில் பாராட்டு

Updated : ஜன 04, 2021 | Added : ஜன 04, 2021
Share
Advertisement
விருத்தாசலம்: ஊராட்சியின் வரவு, செலவு விபரங்களை துண்டு பிரசுரமாக, கிராம மக்களுக்கு வழங்கி வரும் ஊராட்சி தலைவருக்கு, சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிகின்றன.கடலுார் மாவட்டம், விருத்தாசலம் ஒன்றியம், ராஜேந்திரபட்டிணம் ஊராட்சி தலைவர் சுரேஷ்; இன்ஜினியரிங் பட்டதாரி. கடந்த, 2020 ஏப்ரல் 1 முதல், டிசம்பர் 31ம் தேதி வரை, ஊராட்சியின் வரவு - செலவு விபரங்கள், ஊராட்சிக்கு அரசு
 ஊராட்சி தலைவரின்  நேர்மை: வலைதளங்களில் பாராட்டு

விருத்தாசலம்: ஊராட்சியின் வரவு, செலவு விபரங்களை துண்டு பிரசுரமாக, கிராம மக்களுக்கு வழங்கி வரும் ஊராட்சி தலைவருக்கு, சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிகின்றன.

கடலுார் மாவட்டம், விருத்தாசலம் ஒன்றியம், ராஜேந்திரபட்டிணம் ஊராட்சி தலைவர் சுரேஷ்; இன்ஜினியரிங் பட்டதாரி. கடந்த, 2020 ஏப்ரல் 1 முதல், டிசம்பர் 31ம் தேதி வரை, ஊராட்சியின் வரவு - செலவு விபரங்கள், ஊராட்சிக்கு அரசு ஒதுக்கிய நிதி உள்ளிட்ட விபரங்களை, கிராம மக்கள் அறிந்து கொள்ளும் வகையில், துண்டு பிரசுரமாக வெளியிட்டுள்ளார்.குடிநீர் வரி, தொழில் வரி, வீட்டு மனை, பஞ்சாயத்து நிதி உள்ளிட்டவை மூலம், 18 லட்சத்து, 52 ஆயிரத்து 780 ரூபாய், ஊராட்சிக்கு வரவு வந்துள்ளது. மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, மினி டேங்க், பைப் லைன் பராமரிப்பு தொகை, ஊராட்சி ஊழியர்களுக்கு ஊதியம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு, 17 லட்சத்து, 26 ஆயிரத்து, 62 ரூபாய் செலவாகி உள்ளது.ஊராட்சியில், 1 லட்சத்து, 26 ஆயிரத்து 718 ரூபாய் இருப்பு உள்ளதாக துண்டு பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஊழலற்ற நிர்வாகத்தை உருவாக்க அவர் எடுத்துள்ள முயற்சியை, சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்து, பாராட்டி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X