சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தே.மு.தி.க.,வினர் மறியல் 'டோல்கேட்'டில் நெரிசல்

Added : ஜன 04, 2021
Share
Advertisement
திருமங்கலம்: கட்சி நிர்வாகிகளை கைது செய்ததால், காரில் அமர்ந்தபடி தே.மு.தி.க., இளைஞரணி தலைவர் சுதீஷ் மற்றும் அக்கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர்.சுதந்திர போராட்ட வீரர், வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாளை முன்னிட்டு, துாத்துக்குடி மாவட்டம், கயத்தாறு சென்ற, தே.மு.தி.க., இளைஞர் அணி செயலர் சுதீஷை வரவேற்க, தேனி மாவட்டச் செயலர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட அக்கட்சியினர், மதுரை,

திருமங்கலம்: கட்சி நிர்வாகிகளை கைது செய்ததால், காரில் அமர்ந்தபடி தே.மு.தி.க., இளைஞரணி தலைவர் சுதீஷ் மற்றும் அக்கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர்.

சுதந்திர போராட்ட வீரர், வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாளை முன்னிட்டு, துாத்துக்குடி மாவட்டம், கயத்தாறு சென்ற, தே.மு.தி.க., இளைஞர் அணி செயலர் சுதீஷை வரவேற்க, தேனி மாவட்டச் செயலர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட அக்கட்சியினர், மதுரை, திருமங்கலம் கப்பலுார் டோல்கேட் அருகே காத்திருந்தனர்.மழை பெய்ததால், அவர்கள் டோல்கேட்டிற்குள் வந்தனர். நெரிசல் ஏற்பட்டதால், வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன.

டி.எஸ்.பி., வினோதினி, இன்ஸ்பெக்டர் முத்து மற்றும் போலீசார், டோல்கேட்டை விட்டு வெளியில் செல்லும்படி கட்சியினரிடம் கூற, வாக்குவாதம் ஏற்பட்டது.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட, 20 பேரை போலீசார் கைது செய்தனர். அங்கு வந்த சுதீஷ், கப்பலுார் பாலத்தில் காரில் இருந்தபடி, திடீர் மறியலில் ஈடுபட்டார். அவருடன் வந்தவர்கள், கொட்டும் மழையில் மறியல் செய்தனர். வீரபாண்டிய கட்டபொம்மன் இளைஞர் அமைப்பினரும் இதில் பங்கேற்றனர்.கைதானவர்களை போலீசார் விடுவித்ததை அடுத்து, அவர்கள் மறியலை கைவிட்டனர். இதனால், டோல்கேட் பகுதியில், 30 நிமிடங்களுக்கும் மேலாக நெரிசல் ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X