அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஸ்டாலின் முதல்வராக முடியாது அடித்து சொல்கிறார் மு.க.அழகிரி

Added : ஜன 04, 2021
Share
Advertisement
மதுரை: ''தமிழகத்தில் ஸ்டாலின் ஒருபோதும் முதல்வராக முடியாது. என் ஆதரவாளர்கள், அவரை முதல்வராக விட மாட்டார்கள்,'' என, மதுரையில் நேற்று தன் ஆதரவாளர்களுடன் நடத்திய ஆலோசனை கூட்டத்தில், தி.மு.க., முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி, ஆவேசமாக பேசினார்.அழகிரி பேசியதாவது:கடந்த, 1980ல் மதுரை வந்தேன். 'முரசொலி' நிறுவன பொறுப்பை ஏற்க கூறினார் கருணாநிதி. இங்கு உங்களுடன் ஒருவராக

மதுரை: ''தமிழகத்தில் ஸ்டாலின் ஒருபோதும் முதல்வராக முடியாது. என் ஆதரவாளர்கள், அவரை முதல்வராக விட மாட்டார்கள்,'' என, மதுரையில் நேற்று தன் ஆதரவாளர்களுடன் நடத்திய ஆலோசனை கூட்டத்தில், தி.மு.க., முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி, ஆவேசமாக பேசினார்.

அழகிரி பேசியதாவது:கடந்த, 1980ல் மதுரை வந்தேன். 'முரசொலி' நிறுவன பொறுப்பை ஏற்க கூறினார் கருணாநிதி. இங்கு உங்களுடன் ஒருவராக இருக்கிறேன். தென் மாவட்டங்களில் கட்சி, குடும்ப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இருக்கிறேன்.உங்களிடம் இருந்து, என்னை பிரிக்க முடியாது. நான் என்ன துரோகம் செய்தேன். ஏழரை ஆண்டுகள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு சும்மா இருக்கிறேன்.எந்த பதவிக்கும் ஆசைப்பட்டது கிடையாது.

மதுரை எம்.ஜி.ஆரின் கோட்டையாக இருந்ததை, தி.மு.க., கோட்டையாக மாற்றியுள்ளேன். ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ, கருணாநிதியை எதிர்த்து, 11 மாவட்ட செயலர்களுடன் வெளியேறினார். எந்த தொண்டனும் அவருடன் போகவில்லை; அதுதான் நம் பலம். நீங்கள் கட்சியை காப்பாற்றியுள்ளீர்கள். கடந்த, 2006ல் தி.மு.க., ஆட்சிக்கு வந்தது. திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தல் வந்தது. அத்தொகுதி பற்றி இந்தியா முழுதும் பேசப்பட்டது. கருணாநிதி, மாறன், ஏன் இப்போது தலைவராக இருக்கும் ஸ்டாலின் உட்பட அனைவருமே என்னை மன்றாடி, அங்கு பணியாற்ற கேட்டுக் கொண்டனர். நான் மறுத்தேன்.கருணாநிதி மன்றாடிக் கேட்டுக் கொண்டதால், ஒப்புக் கொண்டேன். 40 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தி.மு.க., வேட்பாளரை வெற்றி பெறச் செய்தேன். அப்போது, 'திருமங்கலம் பார்முலா' என, பேசப்பட்டது. பார்முலா என்றால், நான் பணம், காசு கொடுக்கவில்லை. உழைப்பு தான் அந்த பார்முலா. இப்படி, கட்சி முன்னேற்றத்திற்காகவும், வளர்ச்சிக்காகவும் பாடுபட்ட நான் என்ன துரோகம் செய்தேன்? அமைப்பு செயலர்கருணாநிதி, எனக்கு தென்மண்டல அமைப்புச் செயலர் பதவியைக் கொடுத்தார். பதவி வேண்டாம் என கூறினேன். பொதுச் செயலர் அன்பழகனும், கருணாநிதியும் சேர்ந்து வற்புறுத்தியதால், அந்த பதவியை ஏற்றுக் கொண்டேன். நான் கட்சியில் வளர்ச்சி அடைவதை அமுக்க, பலர் பல சதித் திட்டங்களை போட்டனர். என் வீட்டுக்கு மதிய உணவுக்காக, ஸ்டாலின், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ஐ.பெரியசாமி, நேரு போன்ற பலர் வந்தனர்.அவர்கள் முன்கூட்டியே பேசி வைத்தது போல் வந்து, 'உங்கள் தம்பி பொருளாளர் பதவி வாங்கி தர கூறுகிறார்' என, என்னிடம் கேட்டனர்.'

இதில் எனக்கு என்ன இருக்கிறது. தலைவரிடம் கூறினால் கொடுக்க போகிறார்' என, உடனடியாக போன் போட்டு தலைவரிடம், 'தம்பிக்கு பொருளாளர் பதவி வேண்டும்' என்று கூறினேன். மாலையே அந்த பதவி அவருக்கு வழங்கப்பட்டது என்னால் தான்.ஏன் இந்த பதவியை கேட்கின்றனர் என்று பார்த்தால், நான் தென் மண்டல அமைப்புச் செயலராக ஆகிவிட்டதால், பொறாமையில் அவர் பொருளாளர் பதவியை கேட்டுள்ளார்.எல்லாமே நீ தான்இன்னும் ஒரு உண்மையை கூறுகிறேன்.

திருமங்கலம் தொகுதி தேர்தல் முடிந்த இரவு, ஸ்டாலின், அவரது மனைவி, மகன் எல்லாரும் என் வீட்டுக்கு உணவு அருந்த வந்தனர். அப்போது ஸ்டாலினை பார்த்து, 'அப்பாவுக்கு பிறகு எல்லாமே நீ தான்' என்றேன்.'கட்சித் தலைமைப் பதவி, முதல்வர் பதவி என அனைத்தும் நீதான் பார்த்துக் கொள்ள வேண்டும். உனக்குத்தான் அந்த பதவிகள்' என்று கூறினேன். இதை அண்ணாதுரை, கருணாநிதி மீது ஆணையிட்டு கூறுகிறேன்.

இது நான் கூறியது உண்மை. அவரால் இதை மறுக்க முடியுமா? ஆனால், அப்படி பதவி வாங்கி கொடுத்த எனக்கே, அவர் இப்படி துரோகம் செய்தால் எப்படி?லோக்சபா தேர்தலில் மதுரையில் ஜெயித்து, மத்திய அமைச்சர் ஆனேன். அறிவாலயத்திற்கு நான் தொடர்ச்சி 5ம் பக்கம்ஸ்டாலின் முதல்வராக முடியாது!முதல் பக்கத் தொடர்ச்சிமாலை அணிவிக்க சென்ற போது, கருணாநிதி தனியாக பேச வேண்டும் என்று சொன்னதாக, என்னிடம் ஸ்டாலின் கூறினார்.நான் போய்ப் பார்த்தபோது, 'தம்பி துணை முதல்வர் கேட்கிறான் கொடுக்கலாமா' என என்னிடம் கேட்டார் கருணாநிதி. 'எல்லா உரிமையும் உங்களுக்கு இருக்கிறது. இதில் எனக்கு என்ன இருக்கிறது. நான் எந்த பதவியும் உங்களிடம் கேட்கவில்லை. எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை' என்றேன். அவருக்கு அந்த பதவி வழங்கப்பட்டது.

அதற்கு காரணம் நான் தான். நான் மத்திய அமைச்சர் பதவியை ஏற்று விட்டதால், பொறாமையில் அந்த பதவியை ஸ்டாலின் கேட்டுள்ளார்.நான் மத்திய அமைச்சராக இருந்து, மக்களுக்காக உழைத்து உள்ளேன். கட்சிக்கு எந்த துரோகமும் செய்யவில்லை. என் பிறந்த நாளுக்காக, 'பொதுக்குழுவே வருக' என, போஸ்டர் அடித்து ஒட்டி இருந்தனர். இதில் என்ன தவறு?இது ஒரு தவறு என்று, என்னை கட்சியில் இருந்து நீக்கினர். ஏன் ஸ்டாலினுக்கு போஸ்டர் அடிக்கவில்லையா. வருங்கால முதல்வரே என்று கருணாநிதி தலைவராக இருக்கும்போது அடிக்கவில்லையா. ஸ்டாலின் முதல்வர் கனவு காண்பது நடக்கவே நடக்காது. அவர் முதல்வராக வரவே முடியாது. என் ஆதரவாளர்கள் அவரை வர விட மாட்டார்கள்.பின், எனக்கு எதிராக பல சதிகளை செய்தனர். 2011ல், என் குடும்பத்தினருடன் சென்று, கருணாநிதியை சந்தித்து, 'கட்சியில் மீண்டும் சேர்ப்பீர்களா' என கேட்டேன். அவர், 'இவர்கள் ஆட்டமெல்லாம் அடங்கட்டும்; கொஞ்சம் பொறுத்திரு' என்றார். ஆனால், அதற்குள் அவர் படுத்து விட்டார்.அவர் படுத்த படுக்கையாக இருக்கும் போதே, எனக்கு எதிராக அவரது பெயரில், பல அறிக்கைகளை தயாரித்து வெளியிட்டனர். பேட்டி கொடுத்தனர்.

என் மீது பல பழிகளை சுமத்தினர். ஏழு ஆண்டுகள் நான் சும்மா இருக்கிறேன்.அதன்பின், 2016ல் சட்டசபை தேர்தல் நடந்தது. கருணாநிதி தான் நிற்கவில்லை என்று கூறினார். ஆனால் இவர்கள் கட்டாயப்படுத்தி, அவரை தேர்தலில் நிற்க வைத்தனர். அவர் பல மேடைகளில் ஏறி பேசினார்.அப்போதே, அவருடைய பேச்சில் பல தடுமாற்றங்கள் ஏற்பட்டன. கட்டாயப்படுத்தி, அவரை தேர்தலில் நிற்க வைத்து, அவரை பலவீனப்படுத்தி விட்டனர். தற்போது, பலரும் புதிய கட்சி தொடங்க வேண்டும் என்று என்னிடம் கூறினர். எதுவாக இருந்தாலும், நல்ல முடிவாக எடுப்பேன். நல்ல முடிவாக இருந்தாலும், கெட்ட முடிவாக இருந்தாலும் அதை தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

சமீபத்தில் நடந்த கூட்டத்தில், ஸ்டாலினை பார்த்து, ஒருவர், 'கருணாநிதியை மிஞ்சி விட்டீர்கள்' என பேசுகிறார். கருணாநிதியை யாராவது மிஞ்ச முடியுமா. அவருக்கு நிகராக, யாராவது இனி பிறக்க முடியுமா. பிறக்கவே முடியாது.கருணாநிதி பெயர் இல்லாமல் கட்சியை நடத்துகின்றனர். கருணாநிதியை மறந்து விட்டனர். ஆகையால் அவரை நினைவுபடுத்த வேண்டும். அதை மனதில் வைத்து, நீங்கள் செயல்பட வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X