பொது செய்தி

தமிழ்நாடு

இலங்கை கெடுபிடியால் மீனவர்களுக்கு இழப்பு

Added : ஜன 04, 2021
Share
Advertisement
ராமேஸ்வரம்: இலங்கை கெடு பிடியால் ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் மீன்வரத்து இன்றி வெறும் படகுடன் கரை திரும்பியதால், வருவாய் இழப்பு ஏற்பட்டது.டிச.,12ல் இலங்கை நெடுந்தீவு அருகில் மீன்பிடித்த ராமேஸ்வரம் விசைப்படகை, அந்நாட்டு மீனவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பரப்பினர். இதன்பின் தமிழக மீனவர்களை கைது செய்ய கோரி இலங்கை மீனவர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் டிச.,14

ராமேஸ்வரம்: இலங்கை கெடு பிடியால் ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் மீன்வரத்து இன்றி வெறும் படகுடன் கரை திரும்பியதால், வருவாய் இழப்பு ஏற்பட்டது.

டிச.,12ல் இலங்கை நெடுந்தீவு அருகில் மீன்பிடித்த ராமேஸ்வரம் விசைப்படகை, அந்நாட்டு மீனவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பரப்பினர். இதன்பின் தமிழக மீனவர்களை கைது செய்ய கோரி இலங்கை மீனவர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் டிச.,14 ல் ராமேஸ்வரம், துாத்துக்குடியை சேர்ந்த 40 மீனவர்களை இலங்கை கைது செய்தது.

இந்நிலையில் 17 நாட்களுக்கு பின் ஜன.,2ல் ராமேஸ்வரத்தில் இருந்து கனரக விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் மீன்வளம் நிறைந்த இந்திய, இலங்கை எல்லையில் மீன்பிடிக்க முயன்ற போது, அங்கு 10க்கு மேலான ரோந்து கப்பல், படகில் வந்த இலங்கை கடற்படையினர் துப்பாக்கியை காட்டி மீனவர்களை விரட்டினர்.பீதியடைந்த மீனவர்கள் இந்திய எல்லைக்குள் மீன்பிடித்ததில், பெரும்பாலான படகிற்கு மீன்வரத்து இன்றி வெறும் படகுடன் கரை திரும்பினர். இதனால் நஷ்டம் ஏற்பட்டதால் மீனவர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X