ஸ்ரீவில்லிபுத்துார் ;''ஹிந்துக்களை பழிப்பவர்களுக்கு ஓட்டு இல்லை வேண்டும்,'' மன்னார்குடி செண்டலங்கார செண்பகராமானுஜ ஜீயர் ஸ்ரீவில்லிபுத்துாரில் பேசினார்.
ஸ்ரீவில்லிபுத்துாரில் திருப்பாவை முற்றோதல் விழாவில் அவர் பேசியதாவது;சித்திரை மாதம் தான் புத்தாண்டு. அதைத்தான் கொண்டாடவேண்டும். நமது கலாச்சாரங்கள், தர்மங்கள், ஆகமங்கள், வைபவங்களை மாற்றக்கூடாது. பிறந்த நாளில் வீட்டில் மெழுகுவர்த்தியை அணைக்கவோ, கேக் வெட்டவோ கூடாது. நம் கலாச்சாரத்தை தெரியாதவர்களுக்கு கற்று கொடுக்க வேண்டும். தமிழகத்தில் திருப்பாவை ஒலிக்காத வீடுகள் இல்லை என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும். தேர்தலில் ஆண்டாளை நித்தித்தவர், திருப்பாவை, ஹிந்து கலாச்சாரம் தெரியாத, ஹிந்துக்களை பழிப்பவர்களுக்கு ஓட்டு இல்லை என உறுதியெடுக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் ஆண்டாளை விரோதித்தவர்களை சேர்க்ககூடாது, என்றார்.மேலும்
அவர் நிருபர்களிடம் கூறியதாவது: நெற்றியில் பூசிய திருநீறை அழிப்பவர் ஹிந்து விரோதிகள். அவர்களை நாம் நிராகரிக்க வேண்டும். அனைத்து கட்சிகளும், ஹிந்து மக்களை நோக்கி வருகிறது. ஆன்மிகவாதிகள், மடாதிபதிகள், சன்னியாசிகள் ஹிந்துமத விழிப்புணர்வுகளை செய்தாலே போதும். உண்மையான ஹிந்துவாதிகளை நாம் ஆதரிக்கலாம், என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE