மடத்துக்குளம்:மடத்துக்குளம் நால்ரோடு பகுதியில், விபத்துகள் நடப்பதை தவிர்க்க, ரவுண்டானா அமைக்க பொதுமக்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், மடத்துக்குளம் நால்ரோடு அமைந்துள்ளது. இது, 30க்கும் மேற்பட்ட கிராமப்பகுதி ரோடுகள் இணையும் முக்கிய சந்திப்பாக உள்ளது. இது தவிர, 50க்கும் மேற்பட்ட கடைகள், அரசு மருத்துவமனை, வங்கி, ஏ.டி.எம்., பள்ளி, திருமண மண்டபம் ஆகியவை உள்ளன.தினமும், பல ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பயன்படுத்துகின்றனர். கொமரலிங்கம், கணியூர், காரத்தொழுவு, கிருஷ்ணாபுரம், வயலுார் வழித்தடத்தில் செல்லும் பஸ்கள் நின்று செல்ல, நான்கு திசைகளிலுள்ள ரோடுகளின் ஓரம் திறந்த வெளி பஸ் ஸ்டாப் உள்ளது. இதனால் இப்பகுதியில், போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது.பொதுமக்கள் கூறுகையில், 'பல மாவட்டங்கள் மற்றும் அருகிலுள்ள மாநிலத்தை சேர்ந்தவர்கள், தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கின்றனர். இவர்களுக்கு, நால்ரோடும் இங்குள்ள வாகன நெரிசலும் முழுமையாக தெரியாது. இதனால் நிலைதடுமாறி தொடர்ந்து விபத்துக்கள் நடக்கிறது.'இங்கு ரவுண்டானா அமைப்பதால், விபத்துகளையும், போக்குவரத்து நெரிசலிலும் தவிர்க்கலாம். இதுகுறித்து, நெடுஞ்சாலைத்துறையும், அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE