பொது செய்தி

தமிழ்நாடு

திருமூர்த்தி அணை நீர்மட்டம் வேகமாக உயர்வு: மூன்றாம் மண்டல பாசனத்துக்காக நடவடிக்கை

Added : ஜன 04, 2021
Share
Advertisement
உடுமலை:மூன்றாம் மண்டல பாசனத்துக்காக, நீர் இருப்பு செய்யப்படுவதால், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம், வேகமாக உயர்ந்து வருகிறது.உடுமலை திருமூர்த்தி அணை வாயிலாக, பி.ஏ.பி., பாசனத்துக்குட்பட்ட, 3.77 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு, நான்கு மண்டலமாக பிரித்து தண்ணீர் வழங்கப்படுகிறது. பாசன திட்டத்தின் தொகுப்பு அணைகளில் இருந்து, காண்டூர் கால்வாய் வழியாக தண்ணீர் பெறப்பட்டு,

உடுமலை:மூன்றாம் மண்டல பாசனத்துக்காக, நீர் இருப்பு செய்யப்படுவதால், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம், வேகமாக உயர்ந்து வருகிறது.உடுமலை திருமூர்த்தி அணை வாயிலாக, பி.ஏ.பி., பாசனத்துக்குட்பட்ட, 3.77 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு, நான்கு மண்டலமாக பிரித்து தண்ணீர் வழங்கப்படுகிறது. பாசன திட்டத்தின் தொகுப்பு அணைகளில் இருந்து, காண்டூர் கால்வாய் வழியாக தண்ணீர் பெறப்பட்டு, திருமூர்த்தி அணையில் நீர் இருப்பு செய்த பிறகு, மண்டல பாசனம், திட்டமிடப்படுகிறது.அவ்வகையில், இரண்டாம் மண்டல பாசனத்துக்கு, ஐந்து சுற்று தண்ணீர் வினியோகிக்க அரசாணை பெறப்பட்டது; தொகுப்பு அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகள் மற்றும் பாசன பகுதியிலும், தொடர் மழை காரணமாக, இரண்டாம் மண்டலத்தில், முழுமையாக, சுற்றுகள் முடிக்கப்பட்டது. பாசனப்பகுதியில், மழையால், இறுதிச்சுற்றில் மட்டும், நாட்கள் குறைக்கப்பட்டன.அடுத்த கட்டமாக, மூன்றாம் மண்டல பாசனத்துக்காக, திருமூர்த்தி அணையில், நீர் இருப்பு செய்யப்படுகிறது. அணைக்கு, வினாடிக்கு, 576 கன அடி நீர் வரத்து உள்ளது. வினாடிக்கு, 30 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நேற்றுமுன்தினம், அணைக்கு, வினாடிக்கு, 901 கன அடி நீர் வரத்து இருந்தது.நீர் இருப்பு செய்யப்படுவதால், அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி, அணையின் நீர் மட்டம், 60 அடிக்கு, 51.44 அடியாக இருந்தது.நீர்மட்டம், 50 அடியை தாண்டியுள்ளதால், மூன்றாம் மண்டலத்துக்கு தண்ணீர் திறப்பு குறித்து, கருத்துரு தயாரித்து, அரசாணை பெறும் பணிகளை, பொதுப்பணித்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.நீண்ட இடைவெளிக்குப்பிறகு, வரும் பாசன காலத்திலாவது ஐந்து சுற்றுகள் முழுமையாக தண்ணீர் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில், மூன்றாம் மண்டல பாசன விவசாயிகள் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X