உடுமலை:தேசிய இளைஞர் தின விழா, மாநில போட்டிக்கு திருப்பூர் மாவட்டத்திலிருந்து, 18 பேர் தேர்வாகியுள்ளனர்.சுவாமி விவேகானந்தர் பிறந்த தினத்தை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம், தேசிய இளைஞர் விழாவாக கொண்டாடுகிறது. 15 முதல், 29 வயதுடையோருக்கு தனிநபர், குழு போட்டி நடத்தப்படுகிறது.இசை, நடனம், உடை அலங்காரம், நாடகம், காட்சி கலைகள், எழுத்தாற்றல், பாரம்பரிய விளையாட்டில் திறமையை காட்டுவோர், மாநில போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டு, முதலிடம் பெறுவோர் தேசிய போட்டிக்கு பரிந்துரைக்கப்படுவர். திருப்பூர் மாவட்ட அளவிலான போட்டி டிச., 29 மற்றும், 30ல் தேதி நடந்தது. எட்டு தாலுாகாவில் இருந்து, 53 பேர் பங்கேற்று, தங்கள் படைப்புகளை வீடியோவாக அனுப்பி வைத்தனர்.இவர்களில் தனிநபர் போட்டிக்கு, 11 பேர், குழு போட்டியில் ஏழு பேர் என, 18 பேர் மாநில போட்டிக்கு தேர்வாகியுள்ளனர். ஜன., 5 ம் தேதி முதல், 8 வரை மாநில போட்டி நடக்கிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE