டவுட் தனபாலு| Dinamalar

சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : ஜன 04, 2021 | கருத்துகள் (3)
Share
பா.ஜ.,வை சேர்ந்த, நடிகை குஷ்பு: பா.ஜ., கூட்டணியில், அ.தி.மு.க.,வும், அ.தி.மு.க., கூட்டணியில், பா.ஜ.,வும் உள்ளன. மூக்கை நேரடியாக தொட்டாலும், சுற்றி வளைத்து தொட்டாலும் ஒன்று தான். தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், முதல்வர் வேட்பாளரை அறிவிப்பது, ஒரு மரபு. முதல்வராக, இ.பி.எஸ்.,சை ஏற்றுள்ளோம்; இதில், சந்தேகம் தேவையில்லை. தேர்தல் கூட்டணி அறிவிக்கும் போது, முதல்வர் வேட்பாளரை
 'டவுட்' தனபாலு

பா.ஜ.,வை சேர்ந்த, நடிகை குஷ்பு: பா.ஜ., கூட்டணியில், அ.தி.மு.க.,வும், அ.தி.மு.க., கூட்டணியில், பா.ஜ.,வும் உள்ளன. மூக்கை நேரடியாக தொட்டாலும், சுற்றி வளைத்து தொட்டாலும் ஒன்று தான். தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், முதல்வர் வேட்பாளரை அறிவிப்பது, ஒரு மரபு. முதல்வராக, இ.பி.எஸ்.,சை ஏற்றுள்ளோம்; இதில், சந்தேகம் தேவையில்லை. தேர்தல் கூட்டணி அறிவிக்கும் போது, முதல்வர் வேட்பாளரை அறிவிப்போம்.

'டவுட்' தனபாலு: தமிழக, பா.ஜ., அறிவித்தாலும், அறிவிக்காவிட்டாலும், முதல்வர் வேட்பாளர், இ.பி.எஸ்., தான் என்பது, பா.ஜ., தேசிய மேலிடத்தின் அசைக்க முடியாத கருத்து. எனினும், அதை, தமிழகத்தில், 'டவுட்'டாக வைத்திருந்தால் தான், கூடுதல் இடங்கள் கூட்டணியில் கிடைக்கும் என்ற எண்ணத்தில், உங்கள் கட்சியின் தமிழக தலைவர்கள், ஊதி பெரிதாக்குகின்றனரோ என்ற, 'டவுட்'டும் உள்ளது!

தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் முஸ்தபா: கோவையில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பங்கேற்ற மக்கள் கிராம சபை கூட்டத்தில், ஸ்டாலினை எதிர்த்து கேள்வி கேட்ட பெண், வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார்; தி.மு.க.,வினர் அவரை தாக்கியுள்ளனர். தி.மு.க., ஆட்சிக்கு வந்து விட்டால், இன்னும் அராஜகம் அதிகமாக இருக்கும் என, மக்கள் அச்சப்பட துவங்கி விட்டனர்.

'டவுட்' தனபாலு: இதை பார்க்கும் போது, பேச்சுரிமை, ஜனநாயகம் பற்றி பேசும் கட்சித் தலைவர்கள், பொதுவாழ்க்கையில் அவை பற்றி கிஞ்சித்தும் யோசிப்பது கூட இல்லையோ என்ற, 'டவுட்' ஏற்படுகிறது. அதுபோல, தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், என்னவாகுமோ என்ற பீதி கலந்த பயமும், மக்களுக்கு இப்போது ஏற்பட்டுள்ளதாக நடுநிலையாளர்கள் கூறுகின்றனர்!

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்: முககவசம் அணிந்துள்ள மக்கள், கொரோனா தொற்றுக்கு பயப்பட தேவையில்லை. அரசு சொல்லும், வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் கடைப்பிடித்து, முக கவசம், சமூக இடைவெளி கடைபிடித்தால், ஊரடங்கிற்கு அவசியம் இருக்காது.

'டவுட்' தனபாலு: ஏழெட்டு மாதங்களாக முக கவசம் அணிந்து, சமூக விலகலை கடைப்பிடித்தும், இன்னும், கொரோனா பூதம் அழியவில்லையே என்பதால், எப்போது தான் இந்த பூதம் அழியுமோ என்ற, 'டவுட்' மக்களுக்கு இன்னும் உள்ளது. அதே நேரத்தில், தேர்தல் நெருங்குவதால், ஊரடங்கு உத்தரவு, தமிழகத்தில் பிறப்பிக்கப்படாது என்பதிலும், மக்களுக்கு டவுட் இல்லை. அதனால், முக கவசம் பற்றி கவலைப்படாமல் உலா வருகின்றனர்!lll

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X