சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வேலிக்கு உயர் மின்னழுத்த இணைப்பு: ஒருவர் கைது : ரூ.50 ஆயிரம் அபராதம்

Added : ஜன 04, 2021
Share
Advertisement
ஆனைமலை:ஆனைமலை புலிகள் காப்பகம் முழுவதிலும் வனத்துறையினர், வனவிலங்குகள் பாதுகாப்புக்காக, விதிகளை மீறி, மின் வேலி அமைப்பதை கண்காணித்து, நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.நேற்று முன்தினம், ஆனைமலை சேத்துமடை அருகே, தேவனுார் கரடு பகுதியில், வனத்தையொட்டிய விளைநிலத்தில், விவசாயத்துக்கு பயன்படுத்தும் உயர் மின்னழுத்த இணைப்பை, மின் வேலிக்கு கொடுப்பதாக, வனத்துறைக்கு தகவல்

ஆனைமலை:ஆனைமலை புலிகள் காப்பகம் முழுவதிலும் வனத்துறையினர், வனவிலங்குகள் பாதுகாப்புக்காக, விதிகளை மீறி, மின் வேலி அமைப்பதை கண்காணித்து, நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.நேற்று முன்தினம், ஆனைமலை சேத்துமடை அருகே, தேவனுார் கரடு பகுதியில், வனத்தையொட்டிய விளைநிலத்தில், விவசாயத்துக்கு பயன்படுத்தும் உயர் மின்னழுத்த இணைப்பை, மின் வேலிக்கு கொடுப்பதாக, வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.பொள்ளாச்சி வனச்சரக அலுவலர் புகழேந்தி தலைமையிலான வனத்துறையினர், சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். தோப்பை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்யும் செமனாம்பதியை சேர்ந்த தங்கவேல் மகன் கார்த்திகேயன், 28, தடையை மீறி மின் வேலிக்கு உயர் மின்னழுத்த இணைப்பு கொடுத்தது தெரியவந்தது.இதையடுத்து, வனத்துறையினர் அவரை கைது செய்து, 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும், காப்பகம் முழுவதிலும், சட்ட விரோதமாக மின் வேலி அமைத்தவர்கள் குறித்து கண்காணித்து வருகின்றனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'விவசாயிகள் வனத்தையொட்டிய பகுதிகளில், வனவிலங்குகளை பாதிக்காத வகையில், 'சோலார்' மின் வேலி மட்டுமே பயன்படுத்த வேண்டும். வேலி அமைக்கும் முன் வனத்துறைக்கு, கட்டாயம் தகவல் தெரிவிக்க வேண்டும். உயர்மின்னழுத்தம் கொண்ட மின் வேலி அமைப்பது சட்டப்படி குற்றமாகும்.மின் வேலி அமைப்பது தெரிந்தாலோ, மின்வேலியில் சிக்கி வனவிலங்குகள் மரணித்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல், வனத்துறை அமைத்துள்ள, அகழியை மூடக்கூடாது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X