''வசூல் பண்ணாம விடக் கூடாதுன்னு முடிவு பண்ணியிருக்கா ஓய்...'' என்றபடியே பெஞ்சில் அமர்ந்தார், குப்பண்ணா.''மாமூலா, வரியா வே...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.
''பிரதமர் கிசான்திட்டத்துல தமிழகத்தில் கடலுார், விழுப்புரம்,கள்ளக்குறிச்சி, தி.மலை, சேலம் உட்பட, 13 மாவட்டங்கள்ல முறைகேடு நடந்தது... லட்சக்கணக்கான போலி பயனாளிகள், இதுல முறைகேடா சேர்ந்து, அரசு பணத்தை, 'ஆட்டைய' போட்டா ஓய்...
''அதை எல்லாம் கண்டுபிடிச்சு, பணத்தை வசூல் பண்ணற வேலையில, அதிகாரிகள் இறங்கினா... ஆனாலும் பலர், பணத்தை திரும்பக் கொடுக்காம, 'டிமிக்கி' கொடுத்துண்டு இருக்கா ஓய்...
''அதனால, தமிழக அரசு பொங்கல் பரிசான, 2,500 ரூபாயை, டிமிக்கி கொடுக்குற ஆளுக்கு கொடுக்காம, அதிகாரிகள் வசூலிக்க போறா ஓய்...
''இதுக்காக வருவாய் மற்றும் வேளாண் அதிகாரிகள் பேச்சு நடத்தி, மோசடியில் ஈடுபட்டோர் பட்டியலை தயார் பண்ணிட்டு இருக்கா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
''வில்லங்க நிலம் விவகாரத்துல, தி.மு.க., மாநில நிர்வாகி சிக்கியிருக்காராம் பா...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார், அன்வர்பாய்.
''விளக்கமா சொல்லுங்க...'' என்றார், அந்தோணிசாமி.
' 'சென்னை அண்ணாநகர், முகப்பேருல, 10 கிரவுண்ட் வில்லங்க நிலம் இருக்கு... இந்த விவகாரத்தை தெரிஞ்சுக்கிட்ட, தி.மு.க., மாநில நிர்வாகி ஒருத்தர், தன் பெயருல பட்டா வாங்கியிருக்கார் பா...
''இந்த பட்டா போலின்னு, போலீசுல புகாராகியிருக்காம்... நிலத்தை சுற்றி போட்டிருந்த காம்பவுண்டு சுவரை, உள்ளூர் கட்சிக்காரங்க இடிச்சு எதிர்ப்பு தெரிவிச்சிருக்காங்க பா...
''ஆனாலும் உள்ளூர் ஆளுங்கட்சி நிர்வாகிகள் மற்றும் போலீசார் துணையுடன், அந்த நிலத்தை கைப்பற்றுற வேலையில, தி.மு.க., மாநில நிர்வாகி தீவிரமா இறங்கியிருக்காராம் பா...'' என முடித்தார், அன்வர்பாய்.
அப்போது அங்கு வந்த, தையல்கடைக்காரர் ஒருத்தர், 'நாயர்... காஜா தைக்கிற பையன் இங்கிட்டு வந்தானா...' என, விசாரித்தார்.
''வரவேற்பு இல்லையாமுங்க...'' என, கடைசி தகவலுக்கு மாறினார், அந்தோணிசாமி.
''என்னன்னு விபரமா சொல்லுதீரு...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.
'சட்டசபை தேர்தலுக்காக, ஓராண்டிற்கு முன்னதாகவே, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், அனைத்து கிராமங்களுக்கும் நடைபயணம் போய், பிரசாரம் செய்ய திட்டம் போட்டு இருந்தாருங்க...
''ஆனா, 'கொரோனா' காரணமாக அவர் நடைபயணம் போக முடியலைங்க... அதற்கு மாற்று ஏற்பாடாக, தி.மு.க.,வின் தேர்தல் வியூக நிறுவனமான, 'ஐபேக்' ஆலோசனையின் படி, 'மக்கள் கிராம சபை' என்ற கூட்டத்தை நடத்திட்டு வர்றாங்க...
''அதுல, உள்ளூர் பெண்களை அழைச்சிட்டு வந்து, அரசுக்கு எதிரான புகார்களை சொல்ல வைக்கிறாங்க... அந்த கூட்டம் பற்றி, தி.மு.க.,வின் இரண்டாம் கட்ட தலைவர்கள், மாவட்ட நிர்வாகிகளிடம் விசாரிச்சு இருக்காங்க...
''அதுக்கு அவங்க, 'ஓட்டு கேட்டு, நாம தான் அவங்க வீட்டுக்கு போகணும்... இப்படி, கூட்டத்துக்கு ஆட்களை அழைச்சிட்டு வர்றது; சாப்பாடு வாங்கி கொடுக்குறதுன்னு, எங்க பணம் தான் செலவாகுது... மக்கள்கிட்ட எந்த வரவேற்பும் இல்லை'ன்னு சொல்லியிருக்காங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.நண்பர்கள் கிளம்ப, பெஞ்ச் அமைதியானது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE