குடிக்க தண்ணீர் இல்லை: தி.மு.க., கூட்டத்தில் புகார்

Added : ஜன 04, 2021
Share
Advertisement
அன்னுார்:'குடிக்க தண்ணீர் இல்லை' என, தி.மு.க., சார்பில் நடந்த மக்கள் சபை கூட்டத்தில், அன்னுார் சர்ச் வீதி மக்கள் சரமாரியாக புகார் தெரிவித்தனர்.தி.மு.க., சார்பில் வார்டு சபை கூட்டம், அன்னுார், அவிநாசி ரோட்டில் நடந்தது. நகர பொறுப்பாளர் ரகமத்துல்லா தலைமை வகித்தார். கூட்டத்தில், அ.தி.மு.க., அரசு மீதான குறைபாடுகளை கட்சியினர் தெரிவித்தனர்.சர்ச் வீதி மக்கள் பேசுகையில், '12

அன்னுார்:'குடிக்க தண்ணீர் இல்லை' என, தி.மு.க., சார்பில் நடந்த மக்கள் சபை கூட்டத்தில், அன்னுார் சர்ச் வீதி மக்கள் சரமாரியாக புகார் தெரிவித்தனர்.தி.மு.க., சார்பில் வார்டு சபை கூட்டம், அன்னுார், அவிநாசி ரோட்டில் நடந்தது. நகர பொறுப்பாளர் ரகமத்துல்லா தலைமை வகித்தார். கூட்டத்தில், அ.தி.மு.க., அரசு மீதான குறைபாடுகளை கட்சியினர் தெரிவித்தனர்.சர்ச் வீதி மக்கள் பேசுகையில், '12 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே, குடிநீர் வருகிறது. குடிநீர் பிரச்சனையால், சிலர் வீடுகளை காலி செய்து விட்டு சென்று விட்டனர். போர்வெல் நீரும் குறைவாகவே வருகிறது.இங்கு அங்கன்வாடி நடத்த கட்டடம் இல்லாததால், அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பள்ளிக்கு மாற்றி விட்டனர். போக்குவரத்து நெரிசலால் சாலையை கடக்க முடிவதில்லை. கழிவு நீர் குளம்போல் தேங்கி நிற்கிறது' என, சரமாரியாக புகார் தெரிவித்தனர்.தி.மு.க., நிர்வாகிகள் பதிலளிக்கையில், 'எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதி பெற்று, அங்கன்வாடி கட்டிடம் மற்றும் கழிவுநீர் வடிகால் அமைக்கப்படும்' என உறுதியளித்தனர்.கூட்டத்தில், வார்டு பொறுப்பாளர்கள் விசுவநாதன், பிரேம் தேவா வரவேற்றனர். ஒன்றிய செயலாளர் ஆனந்தன், தலைமை செயற்குழு உறுப்பினர் நடராஜன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X