சூலுார்:சூலுார் அடுத்த முத்துக்கவுண்டன்புதுார் ஊராட்சி குரும்பபாளையத்தில் 'மினி கிளினிக்' திறக்கப்பட்டது.உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி, கிளினிக்கை திறந்து வைத்து பேசுகையில், ''கொரோனா பரவலை தடுக்க, அரசு பல நடவடிக்கைகளை எடுத்ததால், நோய் பாதிப்பு கட்டுப்படுத்தப் பட்டுள்ளது. ஏழை, எளிய மக்களுக்கு உடனடியாக மருத்துவ வசதி கிடைக்க மினி கிளினிக்குகள் திறக்கப்படுகின்றன. மாவட்டத்தில், 70 கிளினிக்குகளும், ஐந்து நடமாடும் கிளினிக்குகளும் செயல்பாட்டுக்கு வர உள்ளன,'' என்றார்.எம்.எல்.ஏ., கந்தசாமி, மாவட்ட சேர்மன் சாந்திமதி, யூனியன் சேர்மன் மாதப்பூர் பாலு, சுகாதாரத் துறை துணை இயக்குனர் ரமேஷ்குமார், ஊராட்சித் தலைவர் கந்தவேல், வட்டார மருத்துவ அலுவலர் உமர் பரூக் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE