மேட்டுப்பாளையம்:மருதுார் ஊராட்சியில், கான்கிரீட், தார் சாலைகள் அமைத்தல், சிறு பாலம் கட்டுதல் உள்பட, பத்து பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டது.மருதுார் ஊராட்சியில் கனிமம் மற்றும் சுரங்கம் மானியமாக, 68 லட்சத்து, 64 ஆயிரத்து,750 ரூபாய் கிடைத்தது. 15வது நிதிக்குழு மானியத்தில், 30 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிதியில் செல்லப்பனுார் மாரியம்மன் கோவில் அருகே வடிகால், சிமென்ட் கான்கிரீட் தளம், கே.புங்கம்பாளையத்தில், மேற்கு வீதி வரை தார்சாலை, திம்மம்பாளையம் புதுார், கோண மொக்கையூர் குடியிருப்பு பகுதியில் கான்கிரீட் தளம், சத்யா நகர் ஏ.டி., காலனியில் சிறு பாலம் கட்டுதல், கணுவாய்பாளையம் போயர் காலனி சந்திப்பில், மழைநீர் வடிகால் கட்டுதல், திம்மம்பாளையம் புதுார் மயானத்திற்கு சுற்றுச்சுவர் கட்டுதல் உட்பட,10 பணிகள் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் செய்யப்பட உள்ளன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE